“கல்யாண ரேக எது?”… ஜோசியரிடம் ஆர்வமாக கேட்ட பிரியங்கா மோகன்! FUNRIDE பேட்டி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமா ரசிகர்களின் ரீசண்ட் க்ரஷ் நடிகை பிரியங்கா மோகன் அளித்துள்ள நேர்காணல் வீடியோ வைரல் ஆகிவருகிறது.

Advertising
>
Advertising

மீண்டும் இணைந்த காஞ்சனா ஹிட் கூட்டணி… ருத்ரன் டீம் வெளியிட்ட செம்ம அப்டேட்!

டாக்டரில் அறிமுகம்…

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம், எஸ் கே புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த டாக்டர் (Doctor) திரைப்படம் படம் கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தியேட்டரில் வெளியானது. இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் வருண் டாக்டர் (Varun Doctor) என்ற பெயரில் கடந்த ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி வெளியானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரவலாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது இந்த டாக்டர் திரைப்படம். இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி ரசிகர்களின் ஆதரவு பெற்ற நடிகையானார்.

சூர்யாவோடு எதற்கும் துணிந்தவன்

டாக்டர் வெற்றிக்குப் பிறகு பிரியங்கா மோகன் நடிப்பில் அடுத்து வெளியான திரைப்படம் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் இந்த படத்தில் கிராமத்து பெண் வேடத்தில் கலக்கி இருந்தார் பிரியங்கா. மார்ச் 10 ஆம் தேதி வெளியாகி பரவலாக பாராட்டுகளைப் பெற்ற இந்த திரைப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது.

டான் எதிர்பார்ப்பு..

டாக்டர் படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படத்திலும் நாயகியாக ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தின் போஸ்டர்களிலும் லிரிக் வீடியோவிலும் பிரியங்கா மோகன் மெழுகு டாலாக ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார். இந்த திரைப்படம் மே 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்துக்காக ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

பிரியங்காவின் பேட்டி

இதுவரை மூன்று படங்களில் மட்டுமே நடித்து முடித்திருந்தாலும், ரசிகர்களின் ஆதரவை பெற்ற நடிகையாக உருவாகியுள்ளார் பிரியங்கா. இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு அவர் அளித்த நேர்கானல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. 

அந்த வீடியோவில் டாக்டர் படத்தில் ப்ரியங்காவோடு நடித்த சாரா கேக் செய்து அவருக்கு அனுப்பியிருந்தார். மேலும் நிகழ்ச்சியின் அடுத்த பாகத்தில் அவருக்காக ஒரு பெண் ஜோதிடர் பார்க்கும் காட்சிகள் உள்ளன. அதன் முன்னோட்டத்தில் அந்த பெண் ‘நீங்கள் மேலும் மேலும் வளர்ந்து பேரும் புகழும் வாங்கி ஓஹோனு வருவீங்க’ என்று சொல்கிறார். அந்த ஜோதிடரிடம் பிரியங்கா ‘தன் கையில் கல்யாண ரேக எங்க இருக்கு’ எனக் கேட்டுள்ளார். ஜாலியாக செல்லும் இந்த நேர்காணல் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது.

பிக்பாஸ் கொடுத்த ஷேர் ஆட்டோ டாஸ்க்... பரபரப்பான எபிசோட்.. அரங்கேறும் சம்பவங்கள்..

“கல்யாண ரேக எது?”… ஜோசியரிடம் ஆர்வமாக கேட்ட பிரியங்கா மோகன்! FUNRIDE பேட்டி! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Priyanka mohan latest fun ride interview

People looking for online information on டாக்டர், பிரியங்கா மோகன், Doctor, Funride, Priyanka Mohan, Priyanka mohan interview will find this news story useful.