சிவகார்த்திகேயன் நடிக்கும் "டான்"! புகைப்படத்துடன் வெளியான ஹீரோயின் குறித்த மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கவுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார்.

actress priyanka mohan as Angaiyarkanni in don movie
Advertising
>
Advertising

'டாக்டர்' படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். இவர்களுடன் S J சூர்யா, சிவாங்கி, ஆர்.ஜே.விஜய், முனிஷ்காந்த், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்த படத்தில் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளதால், கனிசமாக தனது உடல் எடையைக் குறைத்து நடித்து வருகிறார்.

actress priyanka mohan as Angaiyarkanni in don movie

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் முதற்கட்டப் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தடைபட்டது. பின் சமீபத்தில் மீண்டும் பொள்ளாச்சி, ஆக்ரா, சென்னையில் படப்பிடிப்பு துவங்கி நடைப்பெற்றது. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

இன்று 20.11.2021 கதாநாயகி பிரியங்காவிற்கு 26 வது பிறந்தநாள், இதனை முன்னிட்டு படத்தின் இயக்குனர் சிபி படக்குழு சார்பாக,  பிரியங்காவின் கதாபாத்திர பெயரை வெளியிட்டுள்ளனர், இந்த படத்தில் அங்கையற்கன்னி எனும் பெயரில் பிரியங்கா நடிக்கிறார்.

Tags : D, Don

தொடர்புடைய இணைப்புகள்

Actress priyanka mohan as Angaiyarkanni in don movie

People looking for online information on D, Don will find this news story useful.