விஜய் செயலை பார்த்து கற்றுக் கொண்ட பாடம்.. மனம் திறந்த பிரியங்கா சோப்ரா..20 வருட ஃபிளாஷ் பேக்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : நடிகர் விஜய் பற்றி உலக அழகி பிரியங்கா சோப்ரா பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

2002 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் சினிமாவில் அறிமுகமான முதல் படமே தமிழில் தான். அதனைத் தொடர்ந்து இந்தி சினிமாவில் அறிமுகமானார். பின்னர் ஹாலிவுட் வரை சென்று மிகப்பெரிய அளவில் புகழ் அடைந்தார்.

குவாண்டிகோ என்ற அமெரிக்க டி.வி சீரியல் மூலம் உலகம் முழுவதும் பிரபலமானார் பிரியங்கா சோப்ரா, அதைத் தொடர்ந்து தன்னை விட  10 வயது இளையவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை காதலித்து 2018 ஆம் ஆண்டு திருமணமும் செய்து கொண்டார். அவ்வப்போது ஃபோட்டோ ஷூட் நடத்தி ஆன்லைன் மூலம் டிரெணடிங்கில் இருந்து வரும் நடிகைகளில் பிரியங்கா சோப்ரா முக்கியமானவர். பிரியங்கா சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு மட்டும் 65 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

இளையராஜா இசையில் MGR நடிப்பில் உருவாகும் பொன்னியின் செல்வன்!

 

கடைசியாக பிரியங்கா சோப்ரா நடித்து மேட்ரிக்ஸ் திரைப்படத்தின் 4 ஆம் பாகம் டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து பிரியங்கா சோப்ரா பேசியுள்ளார். அதில் "முதன்முதலில் தான் நடித்த தமிழன் படத்தில் மொழி தெரியாமல் நடித்ததாகவும், வசனங்களை மனப்பாடம் செய்ய கஸ்டப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் வந்துவிட்டால் படப்பிடிப்பு முடியும் வரை வெளியே செல்ல மாட்டார் என்றும் விஜய் பார்த்து பல்வேறு விஷயங்களை தான் கற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார். விஜய்யிடம் இருந்து அதை இப்போதும் நான் கடைபிடித்து வருகிறேன். நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் என்றால் மட்டுமே தவிர மிகவும் அரிதாகத்தான் என்னுடைய கேரவனுக்குத் திரும்பிச் செல்வேன்" என்று பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.

கமல் நடித்த 'விஸ்வரூபம்' ‌புகழ், தேசிய விருது நடன கலைஞர் பிர்ஜு மகாராஜ் மறைவு!

தொடர்புடைய இணைப்புகள்

Actress Priyanka Chopra talking about tamil actor Vijay

People looking for online information on Actor Vijay, Actress Priyanka Chopra, தமிழன், பிரியங்கா சோப்ரா, விஜய், Tamizhan movie will find this news story useful.