காதலருடனான புகைப்படத்தை பகிர்ந்த நடிகை பிரியா பவானி சங்கர்! இவங்க சூப்பர் ஜோடி தான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ப்ரியா பவானி சங்கர் தனது காதலர் உடன் டேட்டிங் சென்ற புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். பின்னர், மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சிறிய வேடத்தில் நடித்தார். பின் எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர் படத்திலும், அருண் விஜய்யுடன் மாபியா படத்திலும் நடித்தார். கடைசியாக ஒ மணப்பெண்ணே, பிளட் மணி படங்களில் நடித்தார். இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், யானை, பத்து தல, பொம்மை,ஹாஸ்டல், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

இந்நிலையில்,  நடிகை பிரியா பவானி சங்கர், தனது காதலருடன் இரவு டின்னரில் இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ராஜ் வேல் எனும் நபரை ப்ரியா பவானி சங்கர் காதலிப்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது காதலருடன் இருக்கும் புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர்.

இந்த விருந்தில் பிரியா பவானி சங்கர், காதலர் ராஜ்வேல் உடன் அவர்களது நெருங்கிய நண்பர்களும் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Actress priya bhavani shnkar with her lover rajvel

People looking for online information on PBS, Priya Bhavani Shankar, Priya Bhavani Shankar Lover, Rajvel will find this news story useful.