“என்னோட ஒரே CRUSH நீங்கதான்”… FIRE விட்ட ரசிகர்… பிரியா பவானி சங்கரின் VIRAL PIC!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பிரியா பவானி சங்கர் தன்னுடைய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர அது இப்போது கவனத்தைப் பெற்று வருகிறது.

Advertising
>
Advertising

விஷாலின் லத்தி.. 5 மொழிகளில் வெளியான ’தெறிக்கவிடும்’ first look!

சின்னத்திரையில் அறிமுகம்….

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமான நடிகை ப்ரியா பவானி சங்கர். விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை மெகாத்தொடர் மூலமாக கவனம் ஈர்த்தார். சீரியலில் நடிக்கும் போதே அவருக்கு ஏராளமான  ரசிகர்கள் இருந்தனர். பின்னர், இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் நடித்த மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை அடுத்து இப்போது வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.

மான்ஸ்டர் தந்த வெற்றி…

எஸ்.ஜே சூர்யாவுடன் பிரியா பவானி சங்கர் நடித்த மான்ஸ்டர் திரைப்படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தது. அடுத்தடுத்து அவர் நடிப்பில் அருண் விஜய்யுடன் மாபியா, ஒ மணப்பெண்ணே மற்றும் வெப் சீரிஸான பிளட் மணி ஆகியவற்றில் நடித்து தமிழில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.  இவர் நடிப்பில் தற்போது ருத்ரன், குருதி ஆட்டம், யானை, பத்து தல, பொம்மை, ஹாஸ்டல் மற்றும் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்கள் உருவாகி வருகின்றன.

தெலுங்கில் குவியும் வாய்ப்புகள்…

வரிசையாக தமிழ் படங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் இப்போது தெலுங்கு படங்களிலும் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். இயக்குனர் விக்ரம் கே குமார் இயக்கத்தில் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ரசிகர்களைக் கவர்ந்த புகைப்படம்…

சமூகவலைதளங்களில் ஆர்வமாக இயங்கி வருபவர் பிரியா பவானி சங்கர். அடிக்கடி தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இப்போது தனது புதிய புகைப்படம் ஒன்றை அவர் பகிர அந்த புகைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பல ரசிகர்களும் அதில் பிரியா பவானி சங்கரின் அழகை வியந்து கமெண்ட் செய்து வருகின்றனர். அதில் ஒரு ரசிகர் ’நீங்கதான் என் வாழ்க்கைல என்னோட ஒரே க்ரஷ்… வேற யாரும் இல்ல’ என கமெண்ட் செய்துள்ளார். பிரியா பவானி சங்கரின் இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

“எல்லாத்தயும் சிரிச்சுட்டே எதிர்கொள்ள காரணம்....” அடடே.. பிறந்த நாளில் பிரசாந்த் நெகிழ்ச்சி

தொடர்புடைய இணைப்புகள்

Actress priya bhavani Shankar latest viral pic

People looking for online information on Kadaikutty Singam, Meyaadha Maan, Monster, Priya Bhavani Shankar, Priya bhavani Shankar latest Picture will find this news story useful.