சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் பிரபல தமிழ் நடிகர் குறித்து சூப்பர் கருத்தை தெரிவித்துள்ளார்.
Also Read | ப்பா, KGF 2 நாயகனுக்கு 100 அடியில் கட் அவுட்.. அதுவும் எந்த ஏரியா'ல தெரியுமா??
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பது மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் ப்ரியா பவானி சங்கர். மேலும் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருப்பவர் பிரியா பவானி சங்கர்.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் செசனை செய்துள்ளார். அதில் ஒரு ரசிகர் நடிகை பிரியா பவானி சங்கரிடம், "உங்களை அகத்தூண்டல் (இன்ஸ்பிரேஷன்) செய்யும் நடிகர் யார்?" என கேட்ட கேள்விக்கு, "தனுஷ்! அவர் தனது சினிமா வாழ்க்கையில் சாத்தித்தது எல்லாம் எளிதானது அல்ல" என பதில் அளித்துள்ளார்.
நடிகர் தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். ஆரம்பம், அனேகன், வாகை சூடவா பட ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜூம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மேலும் தனுசுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராக்ஷி கண்ணா ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
Also Read | "உங்க பிரா சைஸ் என்ன?" ரசிகர் கேட்ட கேள்வி.. பிரியா பவானி சங்கர் சொன்ன 'நச்' பதில்