முதல்முறையாக வீடியோவில் நடிகை ப்ரணிதாவின் குழந்தை.. கொஞ்சி மகிழ்ந்த CUTE வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ப்ரணிதா முதல்முறையாக தனது குழந்தையின் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | LIGER படத்தின் டிரெய்லர் ரிலீஸ்.. ஒரே நாளில் இரண்டு இடங்களில் விழா! களைகட்டும் அப்டேட்!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகை பிரனிதா சுபாஷ். தமிழ், கன்னட, தெலுங்கு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர். குறிப்பாக தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு  அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில்  நடிகை பிரனீதா சுபாஷ் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்‌. சூர்யா நடிப்பில் மாஸ் படத்தில்  நடித்து இருந்தார். அந்த படத்தின் பாடலால் மிகவும் பெயர் பெற்றார்.

அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படத்தில் நடித்த பிரணிதாவுக்கு தமிழ் நாட்டிலும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. பின்னர் அதர்வா  நடிப்பில்  வெளியான ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நித்தின் ராஜ் என்பவரை ப்ரணிதா சுபாஷ் திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு பாலிவுட்டில் ப்ரணிதா   நடித்த ஹங்காமா 2 மற்றும் புஜ்- தி ப்ரைட் ஆஃப் இந்தியா ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளிவந்தன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தான் கர்ப்பமாக இருப்பதை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை ப்ரணிதா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.

பின்னர் வளைகாப்பு புகைப்படங்களை பகிர்ந்து கொண்டார். பின்னர் கடந்த மாதம் தனக்கு பெண் குழந்தை பிறந்தது குறித்து அறிவித்தார். குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டார். தற்போது முதல்முறையாக குழந்தையின் வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read | பிரபல ஓடிடிக்காக வெப்-சீரிஸில் நடிக்கும் பிரபல முன்னணி நடிகை! இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே

முதல்முறையாக வீடியோவில் நடிகை ப்ரணிதாவின் குழந்தை.. கொஞ்சி மகிழ்ந்த CUTE வீடியோ! வீடியோ

Actress Pranitha Subash Baby Girl Video grab attention

People looking for online information on Pranitha Subash, Pranitha Subash with her Baby Girl will find this news story useful.