அட.. இது தெரியாம போச்சே!.. “நடிகைக்கு நடந்த திடீர் திருமணம்!”.. அவரே வெளியிட்ட விளக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்தி, சூர்யா படங்களில் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ்.  பெங்களூரை சேர்ந்த கன்னட நடிகையான இவர் தற்போது திருமணம் செய்து கொண்டு இருக்கிறார். இவருடைய திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

அருள்நிதி நடித்த உதயன் திரைப்படம் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானவர் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகை பிரணிதா சுபாஷ். கார்த்தி நடித்த சகுனி திரைப்படத்திலும், சூர்யா நடித்த மாஸ் திரைப்படத்திலும் நடித்து புகழ் பெற்றார் பிரணிதா.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வரும் பிரணிதா சுபாஷ் Bhuj:The Pride of India  என்கிற திரைப்படம் மூலம் பாலிவுட் திரைப்படத்தில் அறிமுகமாகினார்.

எனினும் இந்த படம் பாலிவுட்டில் ரிலீஸ் ஆகாத நிலையில் Hungama 2 என்கிற இந்தி படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இந்த நிலையில்தான் பெங்களூரை சேர்ந்த பிரபல தொழிலதிபர் நிதின் ராஜூ என்பவரை நேற்றைய தினம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

இந்த திருமணம் பலருக்கும் திடீரென இன்ப அதிர்ச்சியாக தான் இருந்திருக்கிறது. கொரோனா வைரஸ் காலம் என்பதால் பெரிதாக வெளியில் தகவல் சொல்லாமல் நெருங்கிய நண்பர்கள், சுற்றம் மட்டும் சூழ இவர்களுடைய திருமணம் நடந்திருக்கிறது. இந்த திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

இதுகுறித்து தற்போது இன்ஸ்டாகிராமில் விளக்கம் அறிவித்திருக்கிறார் பிரணிதா. அதில், “எங்களுக்கு மே 30ஆம் தேதி திருமணம் நடந்து இருக்கிறது என்பதை பகிர்வதில் பெருமகிழ்ச்சி. இந்த திருமணம் குறித்த தகவலை சொல்ல முடியாததற்கு எங்களை மன்னிக்கவும். கொரோனா கட்டுப்பாடுகளால் திருமணத்திற்கு முதல் நாள் வரை திருமண தேதி குறித்த விஷயத்தில் நாங்கள் உறுதியில்லாமல் இருந்தோம்.

எனவே திருமண தேதியை அறுதியிட்டு முன்பே தெரிவிப்பதற்கு இயலவில்லை. எங்களது உண்மையான மன்னிப்பை ஏற்க வேண்டுகிறோம். எங்களை விரும்பும் உங்களை விட எங்களுக்கு வேறு ஒன்றும் பெரிதல்ல. சூழல்கள் எல்லாம் சரியான பிறகு நிச்சயமாக நாம் விசேஷங்களை கொண்டாடுவோம் என்று நம்புகிறேன்!” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ALSO READ: “என் மகனை அறிமுகப்படுத்துறேன்!” - இன்ஸ்டாகிராமில் நடிகை வரலக்ஷ்மி வைரல் பதிவு!

Actress pranitha opens up marriage with nitin rtaju trending

People looking for online information on Pranitha Subhash, Pranitha wedding, Pranithanitin will find this news story useful.