கன்னடம் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வந்த நடிகை பிரணிதா, அருள்நிதியின் 'உதயன்' என்னும் திரைப்படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
Also Read | "கருப்பு திராவிடன், பெருமைக்குரிய தமிழன்.." யுவன் ஷங்கர் ராஜா பகிர்ந்த படு வைரல் Post
இதனைத் தொடர்ந்து, கார்த்தியின் 'சகுனி' படத்திலும், சூர்யாவின் 'மாஸ்' என்னும் திரைப்படத்திலும் நாயகியாக நடித்திருந்தார் பிரணிதா.
அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படத்தில் நடித்த பிரணிதாவுக்கு தமிழ் நாட்டிலும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவானது.
கடந்த ஆண்டு திருமணம்..
இதற்கு அடுத்தபடியாக, அதர்வாவின் 'ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும்' உள்ளிட்ட மற்ற சில தமிழ் திரைப்படங்களிலும் பிரணிதா நடித்திருந்தார். இந்நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு, தொழலதிபரான நிதின் ராஜூ என்பவரை பிரணிதா திருமணம் செய்து கொண்டார்.
தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் மொழிகளில் பிரபலம் ஆகியிருந்த பிரணிதா, பாலிவுட்டில் நடித்திருந்த 'ஹங்காமா 2' மற்றும் 'புஜ்- தி ப்ரைட் ஆஃப் இந்தியா' ஆகிய திரைப்படங்கள், அவரின் திருமணத்திற்கு பிறகு வெளியாகி இருந்தது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, தான் கர்ப்பமாக இருப்பதை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை பிரணிதா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.
நான் Pregnant'அ இருக்கேன்..
தன்னுடைய கணவரின் 34 ஆவது பிறந்தநாளில், அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பிரணிதா, ரசிகர்கள் மத்தியில் இதனை அறிவித்தார். இதற்கு பிரபலங்கள் தொடங்கி, ரசிகர்கள் வரை பலரும் பிரணிதா மற்றும் அவரது கணவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
முன்னதாக, கர்ப்பமாக இருக்கும் பிரணிதா, தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வெளியிட்டிருந்தார். அதுவும், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி, பல விதமான கமெண்ட்ஸ்களையும் அள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | "ஜீன்ஸ் 2 வர்றதுக்கு வாய்ப்பு இருக்கா?.." பிரசாந்த் உடைத்த 'சீக்ரெட்'.. ஃபேன்ஸ் மீட் 'Exclusive'