தென்னிந்திய நடிகைகளில் முக்கிய நடிகை பிரனிதா சுபாஷ். தமிழ், கன்னட, தெலுங்கு மொழி படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

குறிப்பாக தமிழில் கடந்த 2011ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான உதயன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை பிரனீதா சுபாஷ் அறிமுகமானார். அதன் பின்னர் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘சகுனி’ படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். சூர்யா நடிப்பில் மாஸ் படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தின் பாடலால் மிகவும் பெயர் பெற்றார்.
அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களின் படத்தில் நடித்த பிரணிதாவுக்கு தமிழ் நாட்டிலும் பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவானது. பின்னர் அதர்வா நடிப்பில் வெளியான ‘ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்’ படத்தில் நடித்திருந்தார். கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் நித்தின் ராஜ் என்பவரை ப்ரணிதா சுபாஷ் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு பாலிவுட்டில் ப்ரணிதா நடித்த ஹங்காமா 2 மற்றும் புஜ்- தி ப்ரைட் ஆஃப் இந்தியா ஆகிய திரைப்படங்கள் கடந்த ஆண்டு வெளிவந்தன. கடந்த சில தினங்களுக்கு முன்பு, தான் கர்ப்பமாக இருப்பதை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நடிகை பிரணிதா அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தார்.
தன்னுடைய கணவரின் 34 ஆவது பிறந்தநாளில், அவருடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பிரணிதா, ரசிகர்கள் மத்தியில் இதனை அறிவித்தார். இதற்கு பிரபலங்கள் தொடங்கி, ரசிகர்கள் வரை பலரும் பிரணிதா மற்றும் அவரது கணவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கர்ப்பமான வயிறுடன் நடிகை பிரணிதா ஆடிய செம்ம நடனம் இணையத்தில் சூப்பர் வைரலாகி வருகிறது. முன்னதாக, கர்ப்பமாக இருக்கும் பிரணிதா, தான் வொர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றையும், பிகினி உடையில் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அதுவும், ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி, பல லைக்ஸ்களை அள்ளி இருந்தது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க்.
https://www.behindwoods.com/bgm8/