ஹிந்தியில் ஆரம்பிக்கப்பட்ட ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ், அதில் பெற்ற வெற்றியின் காரணமாக , தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளிலும் ஆரம்பமானது.
அந்த வகையில், தமிழில் இதுவரை ஐந்து பிக்பாஸ் சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. கடைசியாக, நடந்திருந்த ஐந்தாவது பிக்பாஸ் சீசனில், ராஜு வெற்றி பெற்றிருந்தார்.
இதற்கு அடுத்தபடியாக, டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில், 24 மணி நேரமும் பிக்பாஸ் அல்டிமேட் என்னும் நிகழ்ச்சி, தமிழில் கலந்து கொண்ட முந்தைய சீசனின் போட்டியாளர்களை வைத்து ஒளிபரப்பாகி வந்தது.
பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2..
இதனைத் தொடர்ந்து, ஐந்தாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களை வைத்து, பிக்பாஸ் ஜோடிகள் சீசன் 2 என்ற பெயரில், நடன நிகழ்ச்சி ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில், ஐந்தாவது சீசன் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி ஆகியோர், ஜோடியாக சேர்ந்து ஆடி வருகின்றனர்.
"அமீர் கூட ஆடுறது.."
இதனிடையே, இன்ஸ்டாவில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு நடிகை பாவனி சொன்ன பதில்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. இதில், ரசிகர் ஒருவர் பாவனியிடம், "அமீருடன் நீங்கள் ஆடும் போது உற்சாகமாக இருக்குமா அல்லது பதற்றமாக இருக்குமா?" என கேள்வி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த நடிகை பாவனி, பதற்றமாக இருக்கும் என பதில் தெரிவித்துள்ளார்.
உங்க Love பத்தி?
அதே போல, பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி குறித்த ரசிகரின் கேள்விக்கு பதிலளித்த பாவனி, "என் வாழ்வின் மிகப் பெரிய பயத்தை எதிர்கொண்டு வருகிறேன்" என பதிலளித்துள்ளார். நடனமாட அந்த அளவுக்கு பழக்கமில்லாததால் தான் இந்த பதிலை அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக, லவ் பற்றி ஒருவர் கேட்க, நான் தான் (Myself) என பதிலளித்துள்ளார் பாவனி. இப்படி ரசிகர்களின் பல கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள், நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8