"ஒரு காலத்துல பெரிய ஹீரோயின்".. தெருக்களில் யாசகம் செய்யும் 'சக்திமான்' நடிகை!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகையாக இருந்த ஒருவர், தற்போது யாசகம் செய்து வரும் விஷயம் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | Biggboss6 Tamil : "ஜனனி நட்பு தான் வேணும்".. GP முத்து சொன்ன காரணம் கேட்டு Viral ஆக்கிய ரசிகர்கள்!!

பிரபல இந்தி நடிகையாக ஒரு காலத்தில் ஒரு வலம் வந்தவர் நுபுர் அலங்கர். இவர் சக்திமான் உள்ளிட்ட ஏராளமான சீரியல் தொடர்களிலும் நடித்துள்ளார்.

சுமார் 27 வருடங்களாக திரைப்படங்களில் நுபுர் நடித்து வந்த நிலையில், அவருக்கு தற்போது 49 வயதாகிறது.

நடிகை என்பதையும் தாண்டி, கோடிக்கணக்கில் சொத்தும் அவருக்கு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, சினிமா துறையை விட்டு ஒட்டுமொத்தமாக விலகிய நுபுர் அலங்கர், கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சன்னியாசியாகவும் மாறி உள்ளார். தொடர்ந்து, சினிமாவில் இனிமேல் நடிக்க மாட்டேன் என்றும் வாழ்க்கையில் தற்போது நிம்மதியாக இருப்பதாகவும் நுபுர் குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றது.

இந்த நிலையில், தற்போது உத்தர பிரதேச மாநிலம், கோவர்தன் அருகே உள்ள தங்கடி என்னும் பகுதியில், காவி உடை அணிந்தபடி யாசகம் செய்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நுபுர் வெளியிட்டுள்ளார். அதே போல, தான் ஒரு நாளில் யாசகம் செய்து பெற்ற பணத்தை குறிப்பிடும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதனுடன் நபர் ஒருவரிடம் இருந்து யாசகம் பெறும் புகைப்படத்தை பகிர்ந்த நுபுர், தனது யாசக கிண்ணம் மற்றும் அதில் பணம் இருப்பது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். பிச்சை கிடைப்பதால் பணம் கிடைக்கிறது என்றும் தற்போது வாழ்க்கை இப்படி தான் ஓடி கொண்டிருக்கிறது என்றும் நுபுர் குறிப்பிட்டுள்ளார். தான் யாசகம் செய்யும் முதல் நாள் இது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read | Surya42 : கோவாவில் நடந்து வந்த சிறுத்தை சிவா - சூர்யா பட ஷூட்டிங். .. வெளியான அடுத்த அப்டேட்..

தொடர்புடைய செய்திகள்

Actress nupur alankar starts to begging in streets

People looking for online information on Begging, Nupur Alankar, Streets will find this news story useful.