குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கி, இன்று தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நித்யா மேனன்.
Also Read | பிரபல இளம் நடிகர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் தெலுங்கு திரை உலகம்!!
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென் இந்திய மொழிகளில் பல அசத்தலான திரைப்படங்களில் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்துள்ளார் நித்யா மேனன்.
உஸ்தாத் ஹோட்டல், பெங்களூர் டேய்ஸ், ஓ காதல் கண்மணி, 24, மெர்சல் உள்ளிட்ட எக்கச்சக்க திரைப்படங்களில் நித்யா மேனன் நடிப்பு, ரசிகர்களை அதிகம் ஈர்த்திருந்தது. கடந்த ஆண்டில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், தனுஷுடன் நித்யா மேனன் இணைந்து நடித்திருந்த 'திருச்சிற்றம்பலம்' திரைப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது. அது மட்டுமில்லாமல், இந்த படத்தில் நித்யா மேனனை பார்த்த பலரும் இப்படி ஒரு தோழி நமக்கு இல்லையே என ஏங்கும் அளவுக்கு அவரது காட்சிகள் படத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
இதற்கிடையில், Wonder Women, 19(1)(a) உள்ளிட்ட திரைப்படங்களிலும் நித்யா மேனன் நடித்திருந்தார். இந்த நிலையில், நித்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பள்ளி குழந்தைகளுக்கு வகுப்பு எடுத்தது தொடர்பான வீடியோக்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
திருப்பதி அருகே அமைந்துள்ள வரதயா பாளையத்தில், கல்கி பகவான் ஆசிரமத்துக்கு அவ்வப்போது சென்று வருவதை நித்யா மேனன் வழக்கமாக கொண்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் அந்த ஆசிரமத்திற்கு வந்த அவர், சிறப்பு தியானத்தில் கலந்து கொண்டதாக தெரிகிறது. பின் அருகேயுள்ள பழங்குடியினர் கிராமத்திற்கு சென்றுள்ளார்.
அங்கே உள்ள அரசு தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவர்களை சந்தித்த நித்யா மேனன், அவர்களுடன் உரையாடியதுடன் ஆங்கில பாடம் கற்றுக் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ காட்சிகளை அவரே பகிர்ந்துள்ள நிலையில், நெட்டிசன்கள் மத்தியில் அதிக கவனமும் பெற்று வருகிறது.
Also Read | படுஜோராக நடந்த KL ராகுல் - அதியா திருமணம்.. வைரல் ஃபோட்டோஸ்.. வாழ்த்தும் பிரபலங்கள்