வாவ்... இவங்களுக்கு இப்படி ஒரு திறமையா! கடலுக்கு அடியில் நிக்கி கல்ராணி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Nikki Galrani: நடிகை நிக்கி கல்ராணி கடலுக்கடியில் மீன்களுடன் அழகாக நீந்தும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Advertising
>
Advertising

பெங்களூருவை சேர்ந்த நிக்கி கல்ராணி,  1983 என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழ் திரையுலகில் டார்லிங் படம் மூலம் அறிமுகம் ஆனார். இதைத் தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, மொட்ட சிவா கெட்ட சிவா, கலகலப்பு 2, சார்லி சாப்ளின் 2, கீ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

மலையாளத்தில் முன்னணி நடிகையாக வலம் வரும் நிக்கி கல்ராணி, தமிழில் டார்லிங் படத்திற்காக சிறந்த புதுமுக நடிகைக்கான எடிசன்  விருதினை பெற்றுள்ளார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்திருந்தாலும்,  பெரிதான ஹிட் ஏதும் அமையவில்லை. சமீபத்தில் வெளிவந்த ராஜவம்சம் திரைப்படமும் வெற்றி பெறவில்லை.

ஆதி - நிக்கி கல்ராணி ஜோடி யாகவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் ஆகிய இரண்டு படங்களில் நடித்திருந்த நிலையில் இருவருக்கும் காதலித்து வருவதாகவும் கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. ஆதியின் குடும்ப விழாவில் முக்கிய நபராக இருக்கும் நிக்கி இதுகுறித்தும் எதுவும் பேசாமல் மவுனம் காத்து வருகிறார். நடிகைகள் என்றாலே உணவு, டயட், உடற்பயிற்சி போன்ற வீடியோக்கள் வெளியாவது வழக்கம்.

வடிவேலு-வின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் அடுத்த அப்டேட்! SANA-வின் வேற லெவல் சம்பவம் LOADING..!

கொரோனாவால் தொற்று  பாதிப்பால் வீட்டில் முடங்கிய நிக்கி கல்ராணி, உடல் எடை கூடியிருந்த நிலையில், தற்போது மீண்டும் ஸ்லிம் ஆக மாறியுள்ளார்.  சமீபத்தில் இவரது போட்டோஷூட் புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் திகைத்து போனார்கள். தொடர்ந்து வெளியிடும் புகைப்படங்கள்   இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறது.

'நடனம் என்றாலே எனக்கு பயம் பயிற்சி எடுத்துக்கொண்டு ஆடினால் தான் பிடிக்கும், நடனம்னா கொஞ்சம் உதறும்' என பிரபல தனியார் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்த நிக்கி, மீன்களோடு நீந்தும் வீடியோ வெளியாகியுள்ளது. 
Under water paradise செய்யும் வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு முன்பாக, நடிகை த்ரிஷா, சமந்தா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட நடிகைகள் Under water paradise சாகசங்களை நிகழ்த்தியுள்ளனர். அந்த வரிசையில் நிக்கி கல்ராணியும் இடம்பிடித்துள்ளார்.

பரபரப்பு!! இளம் ஹீரோவோட திடீர் பிரேக் அப்.. வீட்லயே அடைபட்டிருக்கும் நடிகை?

நிக்கி கல்ராணியின் வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் உங்களுக்கு இப்படி ஒரு திறமையா என பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Actress Nikki Galrani swimming with fish under the sea goes viral

People looking for online information on டார்லிங், நிக்கி கல்ராணி, Nikki Galrani, Swimming with fish will find this news story useful.