நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமா? பரவிய வதந்தி.. அவரே வெளியிட்ட அறிக்கை! முழு தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக வெளியான தகவல்களை மறுத்துள்ளார்.

Actress Nikki Galrani Statement about her pregnant news
Advertising
>
Advertising

நடிகர் ஆதி - நிக்கி கல்ராணி திருமணம் கடந்த மே மாதம் (19.05.2022) கோலாகலமாக நடை பெற்றது.  முன்னதாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி இவர்களுக்கு நிச்சயம் ஆனது குறிப்பிடத்தக்கது.

Actress Nikki Galrani Statement about her pregnant news

நடிகர் ஆதி பினிசெட்டி, தமிழில் ஈரம், அய்யனார், அரவான், மரகத நாணயம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே போல தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் நடித்துள்ளார்.

கடைசியாக, அவரது நடிப்பில் உருவாகி இருந்த 'கிளாப்' திரைப்படம், நேரடியாக சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. கடைசியாக இவர் வாரியர் படத்தில் வில்லனாக நடித்து இருந்தார்.

அதே போல் நடிகை நிக்கி கல்ராணி, ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான 'டார்லிங்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருந்தார். பின், கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கலகலப்பு 2, மரகத நாணயம், சார்லி சாப்ளின்-2 உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.

நிக்கி கல்ராணி மற்றும் ஆதி ஆகியோர் இணைந்து, மரகத நாணயம் மற்றும் யாகாவராயினும் நாகாக்க ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்திருந்தனர்.

சில மாதங்களுக்கு முன் தம்பதியர் தங்களது திருமணத்தின் 100வது நாளை பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் கொண்டாடினர். இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் பரவின. இந்த வதந்திகளுக்கு மறுப்பு தெரிவித்து நிக்கி கல்ராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அறிக்கை பதிவை பதிவிட்டுள்ளார்.

அதில், "இந்த பெரிய செய்தி எனக்கே தெரியாது. இப்போது என் சார்பாக ஒரு சிலர் இந்த வைரலான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர், தயவுசெய்து காலக்கெடு தேதியையும் எனக்கு தெரியப்படுத்துங்கள்.

குறிப்பு:  நான் கர்ப்பமாக இல்லை நண்பர்களே...எதிர்காலத்தில் இந்த அற்புதமான செய்தியை வெளியிடும் முதல் நபராக நான் இருப்பேன், தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள்." என நிக்கி கல்ராணி தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress Nikki Galrani Statement about her pregnant news

People looking for online information on Aadhi, Nikki, Nikki Galrani will find this news story useful.