அட.! நயன்தாரா மாதிரியே இருக்கும் இந்த ரசிகையின் வீடியோ.. இப்போ செம வைரல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நயன்தாரா போலவே இருக்கும் அவரது ரசிகை செய்த டிக்டாக் வீடியோ வைரல் ஹிட் அடித்துள்ளது. 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது நயன்தாரா ரஜினி நடிக்கும் அண்ணாத்த, ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் நடிகை நயன்தாரா போல இருக்கும் ரசிகையின் டிக்டாக் வீடியோ இணையத்தில் வைரல் ஹிட் அடித்துள்ளது. நயன்தாராவின் தீவிர ரசிகையான இவர், தொடர்ந்து அவர் நடித்த படங்களின் காட்சிகளையும் பாடல்களையும், நயன்தாரா போலவே டிக்டாக் செய்து வந்தார். இந்நிலையில் அண்மையில், நயன்தாரா, உதயநிதி தோன்றும், ஊரெல்லாம் உன்னை கண்டு வியந்தாரா பாடலுக்கு, இவர் நயன்தாரா போலவே செய்த டிக்டாக் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையடுத்து இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரல் ஹிட் அடித்து வருகிறது. 

 

தொடர்புடைய இணைப்புகள்

நயன்தாரா போல இருக்கும் ரசிகையின் வைரல் வீடியோ | actress nayanthara's look alike tiktok star video goes viral

People looking for online information on Mithu Vigil, Nayanthara, Nayanthara Look Alike, Tiktok will find this news story useful.