சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்த நயன்தாரா... ஓபன் பண்ணி பாத்துட்டு சமந்தா சொன்ன விஷயம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார், நயன்தாரா ஐயா படம் மூலம் தனது கோலிவுட் அறிமுகத்தைத் தொடங்கினார். அதன்  பின் சந்திரமுகி, பில்லா, யாரடி நீ மோகினி படங்கள் மூலம் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.

Advertising
>
Advertising

அதன் பின்னர் ரீ என்ட்ரி ஆகி ராஜாராணி, ஆரம்பம், அறம், விஸ்வாசம் படங்களில் அவர் தனது சிறந்த நடிப்புத் திறமையால் ரசிகர்களின் இதயங்களை வென்றதால் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்பட்டார்.  இவர் கடைசியாக தமிழில் நெற்றிக்கண், அண்ணாத்த படங்களில் காணப்பட்டார்.

தற்போது தனது காதலர் விக்னேஷ் சிவன் இயக்கிய காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கிறார். இது போக சிரஞ்சீவி நடிப்பில் காட்பாதர், ஷாருக்கான் மற்றும் அட்லியின் படம், அல்போன்ஸ் புத்ரனின் கோல்ட் படங்களில் நடிக்கிறார்.

அதே போல், சமந்தா (Samantha) தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர், விண்ணைத்தாண்டி வருவாயா, நீ தானே என் பொன்வசந்தம் படங்களின் தெலுங்கு உருவாக்கத்தில் நடித்து புகழ்பெற்றார்.  சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு நல்ல பேரை பெற்றுத்தந்தது.

தற்போது தமிழில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, இயக்குனர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படம்,  தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா' படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான புஷ்பா தி ரைஸ் படத்தின் ஒ அண்ட்டா வா மாவா பாடலுக்கு நடனமாடி வைரலானார். இந்த பாடல் தென்னிந்தியா முழுவதும் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. மேலும் நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் சமந்தா.

இந்நிலையில் நடிகை சமந்தாவுக்கு நயன்தாரா சூப்பர் பரிசு ஒன்றை அளித்துள்ளார். காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இருவரும் இணைந்து நடித்தனர். இந்த படம் வரும் ஏப்ரல் 28 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ராம்போ எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். R'anjankudi A'nbarasu M'urugesa B'oopathy O'hoondhiran என்பதின் சுருக்கமே ராம்போ. காதீஜா எனும் பெயரில் சமந்தா நடிக்கிறார். கண்மனி எனும் கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார்.

காதீஜா என சமந்தாவை அழைத்து காதணிகளை நயன்தாரா பரிசளித்துள்ளார். இந்த பரிசை பெற்ற சமந்தா, நயன்தாராவுக்கு கண்மணி நன்றி என கூறியுள்ளார்.  

தொடர்புடைய இணைப்புகள்

Actress Nayanthara Gift to Samantha for KRK Movie

People looking for online information on Kaathu Vaakula Rendu Kaadhal, KRK, KVRK, Nayanthara, Samantha, Vijay Sethupathi will find this news story useful.