கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடிக்கிறேன்! உறுதி செய்த நடிகை! யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.

இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்தில் கமல்ஹாசனின் மகனாக நடிகர் காளிதாஸ் ஜெயராமன் நடிக்கிறார்.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு 'விக்ரம்' படத்தின் படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக சென்னையில் தொடங்கியது. அதனைத்தொடர்ந்து படக்குழு காரைக்குடி சென்றுள்ளது. காரைக்குடியில் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது.

இந்நிலையில் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானி, மைனா நந்தினி, மகேஸ்வரி நடிப்பதாக தகவல்களை நாம் அறிவித்து இருந்தோம். இதனை உறுதிப்படுத்தும் விதமாக நடிகை நந்தினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை இட்டு, இயக்குனர் லோகேஷ் கனகராஜிற்கு நன்றி கூறியுள்ளார்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Actress nandhini share lokesh kanagaraj bts image from vikram

People looking for online information on Kamal Haasan will find this news story useful.