ஒரே படத்தில் அஜித், விஜய் ,சூர்யாவுடன் நடித்த நடிகை... வெளியான ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மணிரத்னம் தயாரிப்பில் இயக்குநர் வசந்த் இயக்கி கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான படம் 'நேருக்கு நேர்'. இந்த படத்தில் விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்திருந்தனர். இந்த படம் தான் நடிகர் சூர்யாவின் முதல் படமாகும். இந்த படத்தில் நடிகர் சூர்யா வேடத்தில் முதலில் தல அஜித் தான் நடிக்க வேண்டியது.  சில நாட்கள் நடித்த அவர் ஒரு சில காரணங்களால் அந்த படத்தில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக அனைவரையும் கவர்ந்தவர் ஜெனிஃபர். இவர் பின்னாளில் பல்வேறு படங்களில் நடித்த அவர் 'கில்லி' படத்தில் விஜய்யின் தங்கையாக நடித்திருந்தார். இந்நிலையில் 'நேருக்கு நேர்' படம் தொடர்பாக விஜய் அஜித் மற்றும் சூர்யாவுடன் இருக்கும் படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில், ''வாழ்க்கை என்பது நிகழ்வுகளின் தொகுப்பு. நான் தல அஜித் மற்றும் தளபதி விஜய்யுடன் நடித்தேன் என்பது என் வாழ்வில் மிகச்சிறந்த நிகழ்வு. 

தல அஜித் அந்த படத்தில் ஒரு வாரம் மட்டுமே நடித்தார். ஆனால் நான் தல அஜித், தளபதி விஜய்யுடன் ஒரே புகைப்படத்தில் இருக்கிறேன் என்பது மகிழ்ச்சியான விஷயம். இந்த படத்துக்கு சிறந்த குழந்தை நட்சத்திரம் என்ற விருதை பெற்றேன். மாநில அரசின் விருது உட்பட என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பதிவில்  சூர்யாவுடன் இருக்கும்  புகைப்படத்தை பகிர்ந்த அவர், சூர்யா வேடத்தில் தான் நடிகர் அஜித் முதலில் நடிக்கவேண்டியது இருந்ததாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

நேருக்கு நேர் படத்தில் அஜித், விஜய், சூர்யாவுடன் இணைந்து நடித்த அனுபவம் குறித்து நடிகை நான்ச

People looking for online information on Ajith Kumar, Nancy, Nancy Jenifer, Nerukku Ner, Suriya, Vijay will find this news story useful.