விஜய்யின் வாத்தி கம்மிங் ஸ்டெப் போட்ட நமீதா, வானதி சீனிவாசன்.. டிரெண்டாகும் புதிய வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் கடைசியாக நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏப்ரம் மாதம் வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம், ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாஸ்டர் ஜனவரி 13 பொங்கல் அன்று திரையரங்குகளில் நேரடியாக வெளியானது. அதே போல் மிகவும் நலிவுற்றிருந்த திரையரங்குகள் மற்றும் அதன் சார்ந்த தொழில்களை மாஸ்டர் மீண்டும் உயிர் பெற செய்துவிட்டது என்றே சொல்லலாம். மேலும் மக்கள் மதத்திலும் நல்ல வரவேற்பை பெற்றது.

அதிலும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள 'வாத்தி கம்மிங்' பாடல் மிகவும் பிரபலம். அனிருத் இசையமைத்த இப்பாடல் ரிலீஸூக்கு முன்னரே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட் அடித்தது. பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மாஸ்டரின்  வாத்தி கம்மிங் பாடலுக்கு அந்த பிரத்தியேக ஸ்டெப் போட்டு வெளியிட்ட வீடியோக்கள் பலவும் வைரலானது. இந்நிலையில் கோவை சட்டசபை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் களமிறங்கி உள்ளார். அவரை ஆதரித்து இன்று நடிகை நமீதா கோவை தெற்கு தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். கையில் தாமரை சின்னத்தை பிடித்தபடி வேனில் சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது தளபதி விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு அவர் ஆடிய நடன வீடியோ வெளியாகியுள்ளது.

விஜய்யின் வாத்தி கம்மிங் ஸ்டெப் போட்ட நமீதா, வானதி சீனிவாசன்.. டிரெண்டாகும் புதிய வீடியோ..! வீடியோ

Tags : Namitha

தொடர்புடைய செய்திகள்

Actress namitha's vaathi coming dance வாத்தி கம்மிங் ஸ்டெப் போட்ட நமீதா

People looking for online information on Namitha will find this news story useful.