“கடவுள் அருளால் கிடைத்த பரிசுகள்”.. இரட்டை குழந்தைகளுக்கு கடவுள் பெயர் சூட்டிய நமீதா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நமீதாவின் இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா நடந்துள்ள புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "கல்யாணம் ஆன மைனாவுக்கு பிராக்கெட் போடுறியா?".. கேட்டதும் க்யூட்டாக பதில் சொன்ன ஷிவின் 😍 Bigg Boss 6

தென்னிந்திய திரையுலகில் மிக பிரபல நடிகை நமீதா.  பல ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நமிதா, தமிழில் விஜயகாந்த் நடித்த எங்கள் அண்ணா திரைப் படத்தில் பிரபலமாகி, பின்னர் விஜய், அஜித், சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து இருக்கிறார்.

‘மச்சான்’ என்று செல்லமாக ரசிகர்களை அழைக்கும் இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று கலக்கினார். அதன் பின் இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தமது காதலர் வீரேந்திர சௌத்ரியை திருமணம் செய்து கொண்டார்.  ஆனால் திருமணத்திற்கு பிறகு அரசியல் ஈடுபாட்டுடன் இயங்கி வந்த இவர் கடந்த ஆண்டு, தான் கர்ப்பமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் அறிவித்தார்.

அதாவது திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை தனது 40வது பிறந்தநாளில் நமீதா தெரிவித்ததுடன், Pregnancy போட்டோ ஷூட்களையும் அவ்வப்போது பதிவிட்டு வந்தார். அதன்பின்னர்தான் நமீதா - வீரேந்திர சௌத்ரி தம்பதிக்கு கிருஷ்ண ஜெயந்தி தினத்தில் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்.

இதனை அடுத்து ரசிகர்களும் பிரபலங்களும் நமீதாவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து நமீதா தன் குழந்தைகளுடனான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில்தான் தன் இரட்டை குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா நடந்தது குறித்து  சோசியல் மீடியாவில் பகிர்ந்து பெயர்களையும் அறிவித்துள்ளார் நடிகை நமீதா. அதன்படி நமிதாவின் சொந்த ஊரான சூரத் நகரில் நமீதா- வீரேந்திர சௌத்ரி தமபதியரின் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் இந்த பெயர் சூட்டும் விழா நடந்துள்ளது.

இதில்தான், தம் குழந்தைகளுக்கு கிருஷ்ணா ஆதித்யா மற்றும் கியான் ராஜ் என பெயர்களை சூட்டியுள்ளதாக நடிகை நமிதா இதுகுறித்து தன் இன்ஸ்டாகிராமமில் பதிவொன்றை பகிர்ந்துள்ளார்.  அந்த பதிவில் நடிகை நமிதா, ‘கிருஷ்ணா ஆதித்யா’ மற்றும் ‘கியான் ராஜ்’ இருவரும் என் அழகான அற்புதங்கள். இருவரும் என் ‘கிருஷ்ணரால்’ (கடவுள்) பரிசளிக்கப்பட்ட விலையுயர்ந்த பரிசுகள். எனவே குழந்தைகளுக்கு கிருஷ்ணரின் பெயர் வருமாறு வைக்க எண்ணினேன். எனது சொந்த ஊரான சூரத்தில் நெருக்கமான மற்றும் என் அன்புக்குரியவர்கள் மத்தியில் இந்த பெயர் சூட்டும் விழா சிறப்பாகவே நடந்தது. உங்கள் அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

Also Read | தயாரிப்பாளர் தனஞ்செயனின் மூத்த மகள் திருமணம்.. திரளென வாழ்த்திய திரையுலகம்..! புகைப்படங்கள்..

தொடர்புடைய இணைப்புகள்

Actress Namitha twin baby naming ceremony

People looking for online information on BiggBoss6, Biggbosstamil, Nameetha, Namita, Namitha will find this news story useful.