பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலில் நடிகை நமீதா சிறப்பு எண்ட்ரி கொடுத்துள்ளார்.

ஆம், இப்போதெல்லாம் வெள்ளித்திரை நடிகைகள் சின்னத்திரையில் அவ்வப்போது தலைகாட்டி திடீர் சர்ப்ரைஸ் கொடுத்து பார்வையாளர்களை குஷிப்படுத்துவது தொடர்ந்தபடி உள்ளது. இந்நிலையில்தான் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலில் நடிகை நமீதா சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் என்றென்றும் புன்னகை, ராஜாமகள், நீதானே என் பொன்வசந்தம், கோகுலத்தின் சீதை, சத்யா உள்ளிட்ட பல சீரியல்கள் மிகவும் பிரபலம். இந்த வரிசையில் தேவ்யானி, அபிஷேக், திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் பலர் நடித்து வரும் சீரியல் புதுப்புது அர்த்தங்கள்.
இந்த சீரியலில் தேவயானி தன் மகனுக்காக அபிஷேக்கை வெறுக்கிறார். இதனிடையே தேவயானியின் மருமகள் சரியாக நடந்துகொள்கிறார். இந்நிலையில் தான் சாலையில் காரில் வரும் நமீதா, வழியில் திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாயை பார்க்கிறார்.
அதை பார்த்துவிட்டு, யாருக்குமே சமூக பொறுப்பு இல்லை. அனைவரும் இதை கடந்து செல்கின்றனர் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார். அப்போது தேவயானியின் மருமகள் அதை எடுத்து மூடுகிறார். நடிகை நமீதா அதை பாராட்டுகிறார்.
இந்த ப்ரோமோ பரபரப்பாகி ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தினம் இரவு 8.30 மணிக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகிறது.