கர்ப்பமான வயிறோடு வைரல் PIC! ரசிகர்களின் வாழ்த்து மழையில் நடிகை நமீதா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நமீதா தற்போது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ள புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | "உண்மையான டான் உதயநிதி சார் தான்" - சிவகார்த்திகேயன் கலகலப்பான பேச்சு - வீடியோ!!

நமீதா…

தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணா உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் பரிச்சயமானவர் நடிகை நமீதா. அதன் பிறகு பல படங்களில் கவர்ச்சி வேடத்தில் நடித்து கலக்கி முன்னணி நடிகையானார். முன்னணி நடிகர்களான விஜய், அஜித் ஆகியோர் நடித்த முறையே  அழகிய தமிழ் மகன் மற்றும் பில்லா ஆகிய படங்களில் தோன்றி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

சினிமா தவிர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டார். பின்னர் சிறிய இடைவெளிக்குப் பின்னர் தமிழ் பிக்பாஸ் சீசன் ஒன்றில் ஒரு போட்டியாளராகக் கலந்து கொண்டார்.

நமீதா திருமணம்…

இந்நிலையில் நமீதா வீரேந்திரா சௌத்ரி என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் மிகவும் எளிமையாக நடந்தது. திருமணத்துக்குப் பிறகும் நடிப்பு மற்றும் அரசியல் என பிஸியாக இருந்த நமீதா, நேற்று வெளியிட்ட ஒரு வீடியோவில் ”உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்லப்போகிறேன். அதை என் பிறந்தநாளில் அறிவிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

பிறந்தநாள் சர்ப்ரைஸ்..

இந்நிலையில் இன்று அவரின் பிறந்தநாளை முன்னிட்டு தான் கர்ப்பமாக இருப்பதை புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த புகைப்படம் இப்போது இணையத்தில் கவனம் பெற, மேலும் அந்த புகைப்படத்தோடு “ தாய்மை எனும் புதிய அத்தியாயம் தொடங்கியதும் என்னுள் ஒரு மாற்றம், மிகவும் மென்மையாக நடந்துள்ளது. சூரியன் என் மீது பிரகாசிக்கும்போது, புதிய வாழ்க்கை, புதிய உயிர் என்னை அழைக்கின்றன. நான் விரும்பியதெல்லாம் உன்னைதான், உனக்காகதான் இவ்வளவு நாள் பிராத்தனை செய்தேன். உன் மென்மையான உதைகள் மற்றும் உன் படபடப்புகள் அனைத்தையும் என்னால் உணர முடிகிறது” எனக் குழந்தையைப் பற்றி நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். கர்ப்பமான வயிறோடு அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகின்றன. நமீதாவின் நெருங்கிய நண்பர்களான  காயத்ரி ரகுராம் மற்றும் நடிகை குஷ்பு ஆகியோரும் இந்த பதிவில் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

கர்ப்பமான வயிறோடு வைரல் PIC! ரசிகர்களின் வாழ்த்து மழையில் நடிகை நமீதா! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress namitha motherhood baby bump viral pic

People looking for online information on Namitha, Namitha Latest Pictures, Namitha Pregnancy Picutres will find this news story useful.