VIDEO: இரட்டை குழந்தைகளுக்கு தாயான நடிகை நமீதா.. அவரே சொன்ன குட் நியூஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை நமீதா இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்து கூறி தனது 4 மாத குழந்தையின் CUTE போட்டோவை வெளியிட்ட காஜல் அகர்வால்!

தமிழ் சினிமாவில் விஜயகாந்துக்கு ஜோடியாக எங்கள் அண்ணா (2004) படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நமீதா. அதன் பிறகு பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். முன்னணி நடிகர்களான அஜித்,விஜய் ஆகியோர் நடித்த முறையே பில்லா மற்றும்  அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களில் தோன்றி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்

சத்ய்ராஜ், சரத்குமார்,லாரன்ஸ், பிரசாந்த, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். பிக்பாஸ் சீசன்-1 ல் போட்டியாளராகவும் தடம் பதித்தவர். நமிதா, 2019ல் பாஜக கட்சியில் இணைந்து அரசியலிலும் செயல்பட்டு வருகிறார்.

நமீதா, வீரேந்திரா சௌத்ரி என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். சில மாதங்களுக்கு முன் நடிகை நமீதா தனது 41வது பிறந்தநாளை முன்னிட்டு, தான் கார்ப்பமாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அந்த பதிவில், ”உங்களுக்கு ஒரு சந்தோஷமான விஷயத்தை சொல்லப்போகிறேன். அதை என் பிறந்தநாளில் அறிவிக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் நடிகை நமீதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை கணவருடன் சேர்ந்து வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளன என கூறியுள்ளார். மேலும் குரோம் பேட்டை ரீலா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் மருத்துவர்கள் புவனேஸ்வரி, ஈஸ்வர், வேல்முருகன், நரேஷ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Also Read | "அஜித் சொக்கத்தங்கம்".. அஜித்தை சந்தித்து ஆட்டோகிராப் வாங்கிய ரசிகையின் உருக்கமான பதிவு!

VIDEO: இரட்டை குழந்தைகளுக்கு தாயான நடிகை நமீதா.. அவரே சொன்ன குட் நியூஸ்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Namitha gave birth to baby boy twins

People looking for online information on Namitha, Namitha Blessed with Twin Baby, Namitha gave birth to baby boy twins will find this news story useful.