மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறந்த பிறகு ரம்யா கிருஷ்ணன், கங்கணா ரணாவத், நித்யா மேனன் என இன்று பலர் அவராக நடிக்கிறார்கள். அவர் உயிரோடு இருந்தபோதே ஜெயலலிதாவாக நடித்தார் நடிகை சித்ரா
1998ல் 'மந்திரி மாளிகையில் மனசம்மதம்' என்கிற படத்தில் ஜெயலலிதாவாக நடித்தார் நடிகை சித்ரா. நாயகனாக ஷீலாவின் மகன் ஜோர்ஜ் விஷ்ணு, மீரா நாயகியாக நடித்தனர். சசிகலாவாக இப்படத்தில் நாயகியாக நடித்த மீரா என்கிற நடிகையின் நிஜ அம்மா நடித்தார். ஜெயக்குமாரி என்கிற மந்திரியாக சித்ரா ஜெயலலிதாவை பகடி செய்யும் ஜெயக்குமாரியாக நடித்தார்.
'அவள் அப்படித்தான்', 'ராஜபார்வை', 'என் உயிர் நண்பா', ரஜினியின் ஊர்க்காவலன், 'சேரன் பாண்டியன்', 'புத்தம் புது பயணம்' ஆகியவை குறிப்பிடத்தக்க படங்கள் ஆகும். இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் புகழ் பெற்றவர்.
மலையாளத்தில் சித்ரா மாதக ராணி என மலையாளிகளால் போற்றப்பட்டவர். சித்ரா நடித்துக்கொண்டிருக்கும் போதே தாயார் இறந்து விட தந்தைக்கும் உடல்நலமில்லாமல் போக, அதனால் நடிப்பை ஒதுக்கி விட்டு தந்தையை கவனித்துக்கொள்ள சினிமாவை விட்டு செல்கிறார். பின்னர் விஜயராகவன் என்கிற தொழிலதிபரோடு திருமணம் செய்தார். இந்நிலையில் இன்று இயற்கை எய்தினார்.