நடிகர் நகுலின் மனைவி ஸ்ருதி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள ஒரு பதிவு கவனத்தைப் பெற்று வருகிறது.
Also Read | KGF 2: ”இப்படி ஒரு படமா… இந்திய சினிமாவ வேற…” புஷ்பா ஹீரோ போட்ட வைரல் Tweet!
நகுல் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் நகுல். இவர் முன்னணி நடிகையான தேவயானியின் சகோதரர் ஆவார். பாய்ஸ் படத்துக்குப் பிறகு நகுல் காதலில் விழுந்தேன், மாசிலாமணி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். படங்கள் தவிர்த்து நகுல் ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்று வருகிறார். ஸ்ருதி என்பவரை சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் திருமணம் செய்துகொண்டார். நடிகர் நகுலுக்கும் அவரது மனைவி ஸ்ருதிக்கும் பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு அகிரா என அவர்கள் பெயர் சூட்டினர்.
வித்தியாசமான பிரசவம்…
நகுல் ஸ்ருதி தம்பதியினர் வித்தியாசமான முறையில் மருத்துவமனைக்கு செல்லாமல் குழந்தை பிறப்பை மேற்கொண்டனர். இது சம்மந்தமான புகைப்படங்களை அவர்கள் இணையத்தில் பகிர்ந்திருந்தனர். அதற்கு விமர்சனங்களும் எழுந்தன. அதுகுறித்து நகுலின் மனைவி ஸ்ருதி பிரசவத்தின் போது, அது எப்படி இருக்க வேண்டும் என்று தான் எடுத்த முடிவை பலர் ஆரம்பத்தில் விமர்சித்ததாகவும், பிறகு, அதனால்தான் தனக்கு நல்ல முறையில் பிரசவம் நடந்துள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
ஆபாச வீடியோ டார்ச்சர்…
இந்நிலையில் தற்போது ஸ்ருதி வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் தனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லைகள் தரும் மர்ம நபர்களைப் பற்றிய எரிச்சலை வெளிப்படுத்தியுள்ளார். அந்த பதிவில் “ஆபாச வீடியோக்களுடன் ஐ லவ் யு என அனுப்பியுள்ளார். எப்படி இந்த மாதிரி சில ஆண்கள் தெரியாத ஒரு பெண்ணுக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பிவிட்டு ஐ லவ் யு என மெஸேஜும் அனுப்புகிறார்கள். இது எனக்கு முதல் முறை இல்லை. பலமுறை இதுபோல ஆபாச வீடியோக்கள் வந்துள்ளன. ஆனால் சமூகத்தில் எப்போதும் பெண்களின் ஆடை மற்றும் ஒழுக்கம் குறித்தே எப்போதும் அதிகமாக விவாதிக்கப்படுகிறது.” எனத் தனது கோபத்தை அந்த பதிவில் வெளிப்படுத்தியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8