"ட்ரீட் தரேன்..சம்பளம் எப்போ வரும்னு தெரியாது".. BIGGBOSS-க்கு பிறகு மைனா பகிர்ந்த வைரல் VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட மைனா நந்தினி தமது வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | இந்த தேதியில்ல தளபதி 67 படத்தோட அப்டேட் வருமா?.. பிரபல கல்லூரியில் பேசிய லோகேஷ் கனகராஜ்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 தமிழ், நிகழ்ச்சி தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்,  கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), மாடல் ஷெரினா, ஈழத்தை சேர்ந்த தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்ட ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 21 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இறுதி போட்டிக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து அசிம், விக்ரமன், ஷிவின் உள்ளிட்ட 3 போட்டியாளர்கள் தகுதி பெற்றனர்.

சமீபத்தில் நடந்த இறுதி போட்டியில் முதல் நபராக ஷிவின் எலிமினேட் ஆனார். பின்னர் விக்ரமன் & அசீம் இடையே ஒருவர் பிக்பாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படி அசீம் இந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றியாளராக நடிகர் கமல்ஹாசனால் அசீம் அறிவிக்கப்பட்டார். அசீம்க்கு பரிசாக மாருதி சுசூகி பிரேஸா காரும், 50 லட்ச ரூபாய் காசோலை, வெற்றிக் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னதாக எலிமினேட் ஆன மைனா நந்தினி வீடு திரும்பியுள்ளார். அவரை அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சந்தித்து ஆரத்தி எடுத்து கேக் வெட்டிக் கொண்டாடிய வீடியோ காட்சிகளை மைனா நந்தினி வெளியிட்டுள்ளார்.  அப்போது "எல்லாருக்கும் ட்ரீட் கொடுக்கப்படும். ஆனால் என் சம்பளம் எப்போ வரும்னு தெரியாது. வந்ததும் சொல்றேன்" என மைனா நந்தினி வீடியோவில் பேசியுள்ளார்.

Also Read | திடிரென மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற TTF வாசன்.. அவரே சொன்ன நோய்க்காரணம்.. VIDEO

"ட்ரீட் தரேன்..சம்பளம் எப்போ வரும்னு தெரியாது".. BIGGBOSS-க்கு பிறகு மைனா பகிர்ந்த வைரல் VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Myna Nandhini first video after Bigg Boss

People looking for online information on Myna Nandhini, Myna Nandhini first video after Bigg Boss will find this news story useful.