மெக்காவுக்கு புனித பயணம் செய்த நடிகை மும்தாஜ்.. கண்ணீர் மல்க இறை வழிபாடு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை மும்தாஜ்  மெக்கா நகருக்கு உம்ரா புனித பயணம் சென்றுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | மருத்துவமனையில் நடிகர் எஸ்வி சேகர்.. ஆயில் மசாஜால் ஏற்பட்ட உடல்நலக் குறைவு.. முழு தகவல்!

இயக்குனர் விஜய டி. ராஜேந்தர் இயக்கிய ’மோனிஷா என் மோனலிசா’ என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை மும்தாஜ். 

பின்னர் ’குஷி’, 'சாக்லேட்’ படங்களில் முறையை கட்டிப்பிடி கட்டிப்பிடிடா, மல்லே மல்லே பாடல்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சியமானார். வீராசாமி, மகா நடிகன் ஆகிய படங்களிலும் மும்தாஜ் நடித்துள்ளார். பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் மும்தாஜ் கலந்து கொண்டுள்ளார். மும்தாஜ், பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர். அப்போது மும்தாஜ் ஆர்மிகள் மிக பிரபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மும்தாஜ் தற்போது தனது மெக்கா புனித பயணம் குறித்த வீடியோ ஒன்றை கண்ணீர் மல்க வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில்,  "தற்போது மெக்காவில் இருக்கிறேன். அனைவருக்காகவும்  இங்கு நான் பிரார்த்தனை செய்கிறேன். பூமியில் எனக்கு மிகவும் பிடித்த  மெக்காவுக்கு புனித பயணம் செய்துள்ளேன். என்னுடைய உற்சாகத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை.

நான் செய்த தவறுகள் அனைத்தையும்  மன்னித்து விடுங்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை தாருங்கள் என கண்ணீர் மல்க இறை வழிபாடு நடத்தியுள்ளேன்" என்று மும்தாஜ் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

Also Read | பிரபல பாண்டவர் இல்லம் சீரியல் நடிகையின் வளைகாப்பு.. கணவர் குறித்து நெகிழ்ச்சி பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Actress Mumtaz Visit Mecca Madina Emotional Video

People looking for online information on Mecca Madina, Mumtaz, Mumtaz Visit Mecca Madina will find this news story useful.