நடிகை மியா ஜார்ஜ் இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.. கணவருடன் லேட்டஸ்ட் போட்டோ வைரல்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கியவர் மியா ஜார்ஜ். 'அமர காவியம்' திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மியா ஜார்ஜ். தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் அவர் இணைந்து நடித்த 'இன்று நேற்று நாளை' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.தொடர்ந்து சசிக்குமாருடன் 'வெற்றிவேல்', விஜய் ஆண்டனியுடன் 'எமன்' உள்ளிட்ட படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்து, பிரபலமாகியுள்ளார். இதனிடையே இவர் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் மியா ஜார்ஜுக்கு கடந்த வருடம் திருமணம் நடந்து முடிந்தது. அஷ்வின் பிலிப் என்பவருடன் இவருக்கு, கொச்சியில் உள்ள தேவாலயம் ஒன்றில் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இணையத்தில் வெளியான மியா ஜார்ஜின் கல்யாண புகைப்படங்கள் வைரலாகி லைக்ஸை குவித்து வந்தன. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருக்கிறார். தற்போது அவர் எப்படி இருக்கிறார் என்று ரசிகர்கள் யோசித்து வந்த நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

Actress miya george latest photo after marriage மியா ஜார்ஜ் எப்படி இருக்காங்க

People looking for online information on Miya George will find this news story useful.