"ரொம்ப வெயிலா இருக்கு".. மாலத்தீவில் மிருணாளினி ரவி.. வைரல் போட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மிருணாளினி ரவி தமது மாலத்தீவு சுற்றுலா புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

நடிகை மிருணாளினி,  தமிழில் சூப்பர் டீலக்ஸ், எனிமி, சாம்பியன், எம்.ஜி.ஆர் மகன், ஜாங்கோ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் டிக் டாக், டப்மாஷ் போன்ற இணைய பயன்பாட்டு மென்பொருள்களில் வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.

சமீபத்தில் கோப்ரா படத்தில் ஜென்னி எனும் கதாபாத்திரத்தில் நடிகை மிருணாளினி ரவி நடித்திருந்தார்.

சில நாட்களுக்கு முன்,  மிருணாளினி ரவி  மாலத்தீவில் நடனம் ஆடும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின.

இயக்குனர் ஆனந்த் சங்கர் இயக்கிய திரைப்படம் 'எனிமி'. இந்த படத்தில் விஷால் மற்றும் ஆர்யா  சேர்ந்து நடித்தனர். இவர்களுடன் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்டோர் நடித்தனர். 

'எனிமி' படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்திருந்தார். இசையமைப்பாளராக தமனும், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகரும், கலை இயக்குனராக டி.ராமலிங்கமும் பணிபுரிந்தனர்.‌

இந்த திரைப்படம், 2021 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தில் இடம்பெற்ற டும் டும் பாடல் தற்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமன் இசையில் அமைந்த இந்த திருமண கொண்டாட்ட பாடல், தற்போது உலகம் முழுவதும் டிரெண்ட் ஆகி வருகிறது.

பிரபலங்கள் பலர் இந்த பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் ஆக வெளியிட்டு வருகின்றனர். தமன் இசையில் விவேகா பாடல் வரிகளில் இந்த பாடல் அமைந்துள்ளது.

இந்த படத்தில் நடித்து இந்த டும் டும் பாடலுக்கு சிலநாட்களுக்கு முன் நடனம் ஆடிய மிருணாளினி ரவி, தற்போது மீண்டும் மாலத்தீவில் இன்பச்சுற்றுலா சென்றுள்ளார். மாலத்தீவில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மாலத்தீவு கடற்கரையில் இருந்து வெயில் அதிகமாக உள்ளது என குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Actress Mirnalini Ravi Maldives Vacation Photos

People looking for online information on Mirnalini Ravi will find this news story useful.