நடிகை மியா ஜார்ஜ்-க்கு சூப்பராக நடைபெற்ற மணப்பெண் விழா..!! வெளியான போட்டோஸ்.. செம வைரல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மியா ஜார்ஜ்-க்கு நடைபெற்ற மணப்பெண் விழா புகைப்படங்கள் இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. 

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக கலக்கியவர் மியா ஜார்ஜ். இவர் தமிழில் அமரக்காவியம், இன்று நேற்று நாளை, எமன், வெற்றிவேல் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் மலையாள சினிமாவிலும் பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே இவர் விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது நடிகை மியா ஜார்ஜ்-க்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது. அண்மையில் அவர் தனது வருங்கால கணவர் அஷ்வின் என்பவருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டார். இதனிடையே தற்போது மியா ஜார்ஜ்-ன் மணப்பெண் விழா நடந்துள்ளது. இதில் பல்வேறு தோழிகள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர். இணையத்தில் வெளியான இந்த புகைப்படங்கள், செம வைரல் அடித்து வருகிறது. 

 

 

மியா ஜார்ஜின் மணப்பெண் விழா | Actress mia geogre's bridal shower pics goes viral

People looking for online information on Mia George, Mia George Bridal Shower, Mia George Marriage will find this news story useful.