பிரபல இளம் நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மரணமடைந்த செய்தி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் கன்னட சினிமா உலகில் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் அர்ஜுன் அவர்களின் மிக நெருங்கிய உறவினரான, இவர் தமிழில் சில படங்களில் நடித்த நடிகை மேக்னா ராஜை 10 ஆண்டுகள் காதலித்து 2018-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் நடிகை மேக்னா தற்போது 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறார்.
இந்நிலையில் நடிகை மேக்னா டிவிட்டர் தளத்தில் தனது வலியை கூறியுள்ளார். அவர் "கடந்த சில நாட்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனது அழகான உலகம் கோடி துண்டுகளாக உடைந்துவிட்டது. நான் துக்கத்தில் ஆழ்ந்து இருக்கிறேன். ஆனால் இந்த நேரத்தில் எனது குடும்பம், நண்பர்கள், முக்கியமாக சிருவின் ரசிகர்கள் எனக்கு நம்பிக்கை அளித்துள்ளனர். எனது வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு நன்றி சொன்னாலும் அது போதாது. என்னுடன் சேர்ந்து நீங்களும் எனது தூக்கத்தில் பங்கு கொண்டீர்கள். சிருவை ஒரு ராஜாவைப் போல் வழியனுப்பி வைத்ததற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி. அவரும் அப்படி தான் வாழ வேண்டும் என்று விரும்பினார்" என்று கண்ணீருடன் பதிவிட்டுள்ளார்.