EXCLUSIVE - நடிகை மீரா மிதுன் மீது கேரளா போலீஸ் நடவடிக்கை... காரணம் இந்த வீடியோவா..?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீரா மிதூன். பிக் பாஸ் தமிழ் சீஸன் 3-ல் கலந்து கொண்ட பிறகு மிகவும் பிரபலமடைந்தார். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் அவர் வெளியிட்ட டிவிட்டர் வீடியோவில், மலையாளிகளுக்கு எதிராக தகாத வார்த்தைகளால் பேசியதாக, நடிகை மீரா மீது, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தொடப்புழாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சட்ட சிக்கலில் சிக்கியுள்ளார் மீரா மிதுன்.

இந்த வழக்கு தொடர்பாக நமது Behindwoods சேனல் இடுக்கி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிஜு ஜேக்கப்பை தொடர்பு கொண்ட போது, "நாங்கள் இந்த வழக்கை எடுத்துள்ளோம், விசாரணை இன்னும் நடந்து வருகிறது. இந்த புகார் குறித்து நேற்று (செப்.23) நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞர் மூலமாக வழக்கு தொடரப்பட்டது" என்று கூறியுள்ளார். நடிகை மீரா மிதுன் மீது தொடரப்பட்ட FIR அறிக்கை இதோ..!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress meera mithun to face legal action for this videoமீரா மிதுன் மீது போலீஸ் நடவடிக்கை

People looking for online information on BiggBoss 4, FIR, Meera Mithun, Police Case will find this news story useful.