சார்... மீனா மேடம் சார்.!!!😊 SHOOTING-ல் பிஸியான நடிகை மீனா.. BTS வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படப்பிடிப்பு தள வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

90-களில் தமிழ் & தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் மீனா நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாகவும் & கதாநாயகியாகவும்  ரஜினி, கமல், அஜித், விஜய், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்  என முன்னணி நடிகர்களுடன் ஒரு காட்சியிலாவது இணைந்து மீனா நடித்திருக்கிறார்.

தற்போதும், தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த மீனா, கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகை மீனாவின் மகள் நைனிகா, அட்லி இயக்கிய தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார்.

சமீபத்தில்  தனது 46வது பிறந்தநாளை கேக் வெட்டி நடிகை மீனா கொண்டாடினார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மீனா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விளம்பர படத்தில் நடிக்கும் BTS வீடியோவை வெளியிட்டுள்ளார். மேக்கப் போடுவது முதல் தளத்தில் படப்பிடிப்பு நிலையில் நின்று நடிப்பது வரை அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.

Tags : Meena

தொடர்புடைய இணைப்புகள்

Actress Meena Shared New BTS Video from Ad Shooting

People looking for online information on Meena will find this news story useful.