குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா.
Also Read | நீச்சல் குளத்தில் கணவர் நிக் ஜோன்ஸ் & குழந்தையுடன் பிரியங்கா சோப்ரா.. UNSEEN PHOTO!
தற்போதும், தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்த மீனா, கடந்த 2009 ஆம் ஆண்டு, வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மேலும், இந்த தம்பதியருக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார். குடும்பமாக அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்து வந்த நிலையில், கடும் துயரம் ஒன்று ஒரு மாதத்திற்கு மீனா மற்றும் நைனிகாவை சூழ்ந்து கொண்டது.
கடந்த ஜூன் மாதம் 29 ஆம் தேதியன்று, மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல்நல குறைவால் காலமானார். அவரது மறைவு, திரையுலகினர் அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. கணவரின் மறைவால், கடுமையாக மனமுடைந்து போன மீனா, அவரது நினைவால் சில மனம் உருகும் பதிவுகளையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில், கணவர் மறைந்து சுமார் ஒரு மாதங்களுக்கு மேலான நிலையில், தற்போது மெல்ல மெல்ல அதிலிருந்து நடிகை மீனா மீண்டு வருவதாக தெரிகிறது. அதன்படி, சமீபத்தில் தனது நெருங்கிய தோழிகளும், பிரபல நடிகைகளுமான சங்கவி, சங்கீதா மற்றும் ரம்பா ஆகியோர், குடும்பமாக வந்து நடிகை மீனா மற்றும் அவரது மகள் நைனிகா ஆகியோரை சந்தித்துள்ளனர்.
ரம்பா, சங்கவி மற்றும் சங்கீதா ஆகியோர் குடும்பமாக வந்து சந்தித்த புகைப்படங்களை நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கணவர் மறைவுக்கு பின், நடிகை மீனா முதல் முறையாக தனது புகைப்படத்தினை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள நிலையில், அவர் சிரித்த முகத்துடன் இருப்பதால், இப்படி அவரை பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
பிரபல நடிகைகள் குடும்பமாக மீனாவை சந்தித்தது தொடர்பான புகைப்படங்களும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
Also Read | Monochrome போட்டோஷூட்டில் மாஸ் காட்டிய ஸ்ருதிஹாசன்.. இதுக்கு தானா? வெளிவந்த செம போட்டோஸ்