"32 வருசம் கழிச்சு என் முதல் ஹீரோவோட நடிக்குறேன்".. நடிகை மீனாவின் வைரல் பதிவு.. யாரு அந்த ஹீரோ.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90-களில் இருந்து மிக முக்கியமான நாயகியாக பலரது மனம் கவர்ந்தவர் நடிகை மீனா.

Advertising
>
Advertising

கண்ணழகி மீனா என்று ரசிகர்களால் வர்ணிக்கப்படும் கமல், ரஜினி, விஜய், அஜித், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்  என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். அண்மைக் காலங்களில் மலையாளத்தில் சக்கை போடு போட்டு வரும் திரிஷ்யம் திரைப்படத்தின் தொடர்வரிசை பாகங்களில் மீனா நடித்தார்.

இதேபோல் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். இந்நிலையில்தான் 32 ஆண்டுகள் கழித்து நடிகை மீனா தம்முடைய முதல் பட நடிகருடன் நடிப்பது குறித்த தகவலை பதிவிட்டு இருக்கிறார். தொடக்கத்தில் சினிமா நட்சத்திரமாக திரையுலகத்தில் அறிமுகமான நடிகை மீனா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் நடித்திருக்கிறார்.

நடிகை மீனாவின் மகள் நைனிகா, அட்லி இயக்கிய தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். கடந்த 2009ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா. அதன் பிறகும் அவ்வப்போது திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது, “32 ஆண்டுகள் கழித்து என்னுடைய முதல் பட ஹீரோவுடன் நான் மீண்டும் இணைந்து நடிக்கிறேன்!” என்று மீனா பதிவிட்டிருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

ஆம், தெலுங்கு சினிமாவில் பழம்பெரும் நடிகரான ராஜேந்திர பிரசாத்துடன் தற்போது மீனா இணைந்து ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். இது தொடர்பாகதான், மீனா தம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். கடந்த 1990-ஆம் ஆண்டு தெலுங்கில் நவயுகம் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில்தான் மீனா நாயகியாக அறிமுகமாகி இருந்தார். அந்த படத்தில் ராஜேந்திர பிரசாந்துக்கு ஜோடியாக மீனா நடித்திருந்தார். அவருடன் தான் 32 ஆண்டுகள் கழித்து மீனா மீண்டும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Actress meena join hands with her first hero after 32 yrs

People looking for online information on Meena, Meena Viral Post, Rajendra Prasad will find this news story useful.