நடிகை மீனாவின் கணவர் திடீர் மரணம்.. வெளியான காரணம்..சோகத்தில் குடும்பத்தினர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

90-களில் தமிழ் & தென்னிந்திய சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தவர் நடிகை மீனா. 

Advertising
>
Advertising

குழந்தை நட்சத்திரமாகவும் தென்னிந்திய மொழிகளில் முத்திரை பதித்தவர். மீனா, , ரஜினி, கமல், அஜித், விஜய், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ்  என முன்னணி நடிகர்களுடன் ஒரு காட்சியிலாவது இணைந்து நடித்திருக்கிறார். மலையாள மொழியில் மோகன்லாலுடன் இவர் நடித்த திரிஷ்யம் படம் இதில் குறிப்பிடத்தக்கது. 

கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த திரைப்படத்தில் மீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.நடிகை மீனாவின் மகள் நைனிகா, அட்லி இயக்கிய தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருக்கிறார். கடந்த 2009ஆம் ஆண்டு கணினி பொறியாளார் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மீனா.

கொரோனா தாக்கத்தால் ஏற்கனவே ஏற்பட்ட நுரையீரல் பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில்  மினாவின் கணவர் வித்யாசாகர் சிகிச்சை பெற்று வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று (28.06.2022) சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் காலமானார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Actress Meena Husband Passed away due to illness

People looking for online information on Actress Meena, Husband, Meena will find this news story useful.