"30 வருஷம் ஆச்சு.. எவர் கிரீன் கேரக்டர்!".. 'தன் பழைய ஹிட்' படத்தை பற்றி மீனா நெகிழ்ச்சி பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் நடிகை மீனா தவிர்க்க முடியாத 90ஸ் கிட்ஸ் நடிகையாக பல ரசிகர்களை தன்வசப்படுத்தினார்.

இன்னும் திரிஷ்யம் தொடர்வரிசை படங்கள் மூலமாக தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை மீனா அதிகப்படுத்தவே செய்திருக்கிறார். அத்துடன் மீனாவின் மகளும் அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த தெறி படத்தில் விஜயின் மகளாக நடித்தார்.

இந்நிலையில் நடிகை மீனா தமிழ் சினிமாவில் நடித்த முக்கியத் திரைப்படமான ராசாவின் மனசிலே படத்தில் நடித்த சோலையம்மாள் கேரக்டர் பற்றியும் அப்படம் பற்றியும் சிலாகித்து பேசியுள்ளார். இது தொடர்பாக, தமது இன்ஸ்டாகிராம் பதிவில், “என் ராசாவின் மனசிலே படம் வெளியாகி 30 வருடங்கள் ஆகிறது. படம் ஏப்ரல் 13, 1991ல் ரிலீஸ் ஆனது.

ராஜ்கிரண் சாருக்கு மிக்க நன்றி. எவர் கிரீன் கேரக்டரான சோலையம்மாள் கேரக்டரை என்னை நம்பிக் கொடுத்த இயக்குநர் கஸ்தூரி ராஜாவுக்கு நன்றி. எனக்கு முதல் சூப்பர் ஹிட் பாடலான குயில் பாட்டு பாடலை தந்தார் இளையராஜா சார்.

நன்றியுடனும் உண்மையுடனும் என் புகழுக்கும் வெற்றிப்படிக்குமான முதல் ஏணிப்படியாக இருந்தது என் ராசாவின் மனசிலே. அப்படம் தான் முதன்மையான நடிகையாக 30 வருடங்கள் நான் நீடிக்க காரணமாக இருந்தது.” என குறிப்பிட்டிருக்கிறார்.

ALSO READ: ரைசா முகம் வீங்கியது ஏன்? ஆல்கஹால்..Smoking பண்ணக்கூடாது? மருத்துவர் பைரவி பரபரப்பு பேட்டி!

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress Meena Chiseled about her 30 yrs old Hit movie மீனா

People looking for online information on EnRasavinManasile, Meena will find this news story useful.