வேட்டை நாயுடன் 'வொண்டர் வுமன்' தீமில் 'அசுரன்' பட நடிகையின் வேறலெவல் ஃபோட்டோஷூட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மலையாள முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் தமிழில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான அசுரன் படத்தில் தோன்றி அசத்தினார்.

actress Manju warrier viral trending wonder woman pose

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான திரைப்படம் அசுரன். இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மஞ்சு வாரியர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். இந்த திரைப்படம் இரண்டு தேசிய விருதுகளையும் வென்றது. ஒன்று திரைப்படத்துக்கான தேசிய விருதாகவும், இன்னொன்று தனுஷ்க்கான விருதாகவும் அமைந்தது.

actress Manju warrier viral trending wonder woman pose

அதன்படி சிறந்த மாநில மொழிப் படமாக தேர்வு செய்யப்பட்ட அசுரன் திரைப்படத்திற்கு ஒரு தேசிய விருதும், அசுரன் திரைப்படத்தில் நடித்ததற்காக தனுஷ்க்கு சிறந்த நடிகர் என்றொரு தேசிய விருதும் என இரண்டு வெவ்வேறு தேசிய விருதுகள் கிடைத்தன. இந்த படத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்த மஞ்சு வாரியரின் நடிப்பும் பெரிய அளவில பேசப்பட்டது.

தன் கதாபாத்திரம் எதுவானாலும் அதற்கு உயிர் கொடுத்து அநாயச நடிப்பை வெளிப்படுத்தும் மஞ்சு வாரியருக்கு தென்னிந்தியாவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர் தற்போது எடுத்து வெளியிட்டிருக்கும் போட்டோஷூட் ஒன்று வைரலாகி வருகிறது. வொண்டர் வுமன் தீமில் வேட்டை நாயுடன் கெத்தாக போஸ் கொடுத்து நிற்கிறார் மஞ்சு வாரியர்.

இந்தப் ஃபோட்டோவை தம்முடைய சமூக வலைதளங்களில் மஞ்சு வாரியர் பதிவிட்டதை அடுத்து ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.

ALSO READ: தனுஷ் - செல்வராகவனின் ‘நானே வருவேன்’ .. ஷூட் மற்றும் பாடல் .. செம்ம அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Actress Manju warrier viral trending wonder woman pose

People looking for online information on Asuran, Manju Warrier, Photoshoot, Trending, Viral will find this news story useful.