அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட நடிகை மம்தா.. புதிய தோற்றத்தில் தனது PHOTO-வை வெளியிட்டு பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை மம்தா மோகன்தாஸ் தனது புதிய புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | எலிமினேட் ஆனதும் போட்டியாளர் செய்த காரியம்! "Well Played!" - பிக்பாஸ் சொன்ன உற்சாக வார்த்தைகள்.. bigg boss 6 tamil

2006-ல் விஷால் நடித்த 'சிவப்பதிகாரம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான மம்தா மோகன்தாஸ், தொடர்ந்து குசேலன்,  'குரு என் ஆளு', 'தடையற தாக்க' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். அதன் பிறகு மலையாள படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

2005-ல் மயூகம் என்ற மலையாளப் படத்தின் மூலம் சினிமா உலகில் நடிகையானார் மம்தா மோகன்தாஸ். அதேபோல் 2007-ல் யமதொங்கா என்ற தெலுங்குப் படம் மூலம் தெலுங்கு சினிமாவில் மம்தா மோகன்தாஸ் அறிமுகமானார்.

கடைசியாக தமிழில் விஷால் -ஆரியா நடித்த  எனிமி படத்தில் நடித்திருந்தார் மம்தா மோகன்தாஸ். 2010ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட மம்தா, அதன் பிறகு சரியான மருத்துவ ஆலோசனைப்படி வைத்தியம் எடுத்து குணமானார். தற்போது புற்றுநோயில் இருந்து முழுவதும் விடுபட்ட மம்தா மோகன்தாஸ், தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகின்றார்.

மலையாளத்தில் முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், திலீப், பிருத்வி ராஜ், ஜெயராம், சுரேஷ் கோபி ஆகியோருடன் மம்தா மோகன்தாஸ் ஜோடியாக நடித்துள்ளார். கடைசியாக பிருத்விராஜூடன் ஜனகனமன படத்தில் நடித்திருந்தார்.

தமிழில் ஊமை விழிகள், மலையாளத்தில் அன்லாக் ஆகிய படங்கள் இவர் நடிப்பில் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை மம்தா மோகன்தாஸ், அவ்வப்போது தனது சுற்றுலா புகைப்படங்கள் & போட்டோ ஷூட் புகைப்படங்களை பகிர்வதை வாடிக்கையாக கொண்டிருப்பவர்.

இந்நிலையில் நடிகை மம்தா மோகன்தாஸ், விட்டிலிகோ எனும் நிறமிழத்தல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தனது புதிய புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவின் கீழ் ரசிகர்கள் மம்தா மோகன்தாஸ் பூரண குணம் அடைய தங்களது ஆதரவை தெரிவித்து வருகிறார்கள்.

Also Read | “ஹவுஸ்மேட்ஸ் சொன்ன விமர்சனங்கள் எப்படி இருக்கு?”- பதில் சொன்ன விக்ரமனை பாராட்டிய கமல்.. Bigg Boss 6

தொடர்புடைய இணைப்புகள்

Actress Mamta Mohandas Suffered from auto immune disease

People looking for online information on Auto immune disease, Mamta Mohandas will find this news story useful.