சென்னை: மாளவிகா மோகன் தனது மார்ஃப் செய்யப்பட்ட ஆபாச போட்டோவை முன்னணி செய்தி நிறுவனம் பகிர்ந்ததற்கு எதிராக டிவிட்டரில் கொதித்துள்ளார்.
பட்டம் போலே எனும் 2013 ஆம் ஆண்டில் வெளியான மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். கேரளாவை சார்ந்த இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் சசிகுமார் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான பேட்ட திரைப்படத்தில் மாளவிகா மோகனன் அறிமுக நடிகையாக தோன்றியிருந்தார்.
இந்த பேட்ட படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார். பின்னர் தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடித்து இருந்தார் மாளவிகா மோகனன். மேலும் தமிழ், மலையாளம்,ஆங்கிலம், கன்னடம்,இந்தி என பல மொழிகளில் நடித்த நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர்.
தற்போது தனுசுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஒடிடியில் வெளியாக உள்ளது. நடிகை மாளவிகா மோகனன் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி தனது புகைப்படங்களை பதிவேற்றுவார். இவரது போட்டோஷூட் புகைப்படங்களுக்கே இவருக்கு தனிப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மாளவிகாவுக்கு முக்கிய இடமுண்டு.
சமீபத்தில் மாலத்தீவில் சுற்றுலா சென்றுள்ள மாளவிகா மோகனன், மாலத்தீவில் எடுக்கப்பட்ட அவரது சமீபத்திய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணயத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றன. இந்த புகைப்படங்களை தனது டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் மாளவிகா மோகனன் பகிர்ந்து இருந்தார். அந்த புகைப்படங்கள் டிவிட்டரில் 50000 லைக்குகளை தாண்டி உள்ளன.
இந்நிலையில் தென்னிந்தியாவின் மிக முன்னணி செய்தி நிறுவனமான ஒன்றில் நடிகை மாளவிகா மோகனனின் மார்ஃப் செய்த போட்டோவை உண்மையான போட்டோ என தவறாக செய்தி வெளியிட்டிருந்தாகவும், மார்ஃப் செய்த போட்டோவை பொதுவெளியில் குறிப்பாக டிவிட்டரில் பகிர்ந்ததாகவும் தெரிகிறது. அந்த செய்தி நிறுவனம் பகிர்ந்த டிவிட்டை மேற்கோள் காட்டி நடிகை மாளவிகா மோகனன் டிவிட்டரில் அந்த நிறுவனத்தை சாடியுள்ளார். அதில், "சமூக ஊடக மைலேஜுக்காக உண்மைச் சரிபார்ப்பைச் செய்யாமல் போலியான போட்டோஷாப் செய்யப்பட்ட அநாகரிகப் புகைப்படங்களைப் பயன்படுத்துவதைக் கண்டு வருத்தமாக இருக்கிறது. Shame on You" என்று டிவீட் செய்துள்ளார்.
மேலும் மார்ஃப் செய்யப்பட்ட ஒரிஜனல் புகைப்படத்தையும் பகிர்ந்த மாளவிகா மோகனன், "இது சில மாதங்களுக்கு முன் எடுக்கப்பட்ட எனது புகைப்படம், யாரோ ஒருவர் போட்டோஷாப் செய்து போலியான மோசமான ஒன்றை உருவாக்கியுள்ளனர். இது போன்ற ஊடக நிறுவனங்கள் உட்பட பலர் இதை பகிர்ந்து வருகின்றனர் , இது வெறும் மலிவான பத்திரிகை வேலை. போலியானதைக் கண்டால் உதவி செய்து புகாரளிக்கவும்." என டிவீட் செய்துள்ளார்.
BREAKING: ஜோதிகாவின் அடுத்த படத்தை இயக்குகிறாரா பிரபல பெண் இயக்குனர்? முழு தகவல்