"வெளில RUDE -ஆ இருப்பாங்க.".. செல்வா SIR அப்படி இல்ல.. BAKASURAN லயா EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் மோகன் ஜி. இதற்கடுத்து திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கி இருந்தார். இதனைத் தொடர்ந்து மோகன் ஜி இயக்கத்தில் உருவான 'பகாசூரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners

பகாசூரன் திரைப்படத்தில் செல்வராகவன், நட்டி (எ) நட்ராஜ் உள்ளிட்டோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதியன்று வெளியாகி இருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் லயாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அதிகம் பிரபலமாக உள்ள லயா, பகாசூரன் திரைப்படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமாகி உள்ளார்.

அதே போல முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்கள் மத்தியில் அவரது நடிப்பு, சிறந்த பாராட்டுக்களையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்த நிலையில், Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை நடிகை லயா அளித்துள்ளார். அதில், பகாசூரன் திரைப்படம் குறித்து நிறைய கருத்துக்களையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

இந்த நிலையில் செல்வராகனுடன் நடித்தது குறித்து பேசிய பகாசூரன் லயா, "நான் பொதுவாகவே யாரையும் பார்த்து வியக்க மாட்டேன். நியூட்ரலாக இருப்பேன். ஆனால் செல்வா சார் இந்த துறையில் என்னைவிட மூத்தவர். அவரை வாடா போடா என்று பேச வேண்டிய வசனம் ஒரு இடத்தில் வந்தது. 

அதனால் நான் அவரை வா, போ அல்லது வாய்யா, போயா என பேசவா என்று இயக்குனரிடம் கேட்டேன். ஆனால் செல்வா சார் என்னிடம் வந்து எனக்கு மிகவும் கம்ஃபர்டிபிளாக சொல்லிக் கொடுத்தார். தன்னை அந்த காட்சியில் போடா என சொல்ல சொன்னார். சிலர் வெளியில் இருந்து பார்க்க Rude ஆக தெரிவார்கள். ஆனால் அவர்களுடன் பழகினால்தான் தெரியும். அவர் தாழ்மையானவர். தன்னை தாராளமாக திட்ட சொன்னார். போடா என சொல்ல சொன்னார்" என தெரிவித்துள்ளார்.

"வெளில RUDE -ஆ இருப்பாங்க.".. செல்வா SIR அப்படி இல்ல.. BAKASURAN லயா EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Laya about Bakasuran movie and selvaraghavan exclusive

People looking for online information on Bakasuran, Laya, Mohan g, Selvaraghavan will find this news story useful.