மலையாள சினிமாவில் கேரக்டர் ரோலில் நடித்து வந்தவர் மலையாள நடிகை லட்சுமி மேனன்.
2012ம் ஆண்டு வெளிவந்த சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின் கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகிர்தண்டா, கொம்பன், வேதாளம், மஞ்சப்பை, மிருதன் என அவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றி பெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகையாக மாறினார்.
அத்ற்கு பின், "றெக்க" படத்தில் நடித்தார். பிறகு சில வருடங்களுக்கு பிறகு இவர் பிரபு தேவாவுடன் நடித்துள்ள யங் மங் சங் படம் விரைவில் வெளிவர உள்ளது. சமீபத்தில் கொம்பன், குட்டிப்புலி, மருது படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்து இருந்தார்.
இந்த படம் நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பானது. கடைசியாக AGP படத்தில் நடித்திருந்தார். Female Schizophrenia தமிழ் படமான "ஏஜிபி - Schizophrenia" படத்தில் Schizophrenia எனும் மன நோய் பாதித்தவராக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் தனது புதிய லுக்குடன் பிரபல உலகப்புகழ் பெற்ற மீன் உணவை உண்ணும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். நிர்வானா மீன் உணவுகளை பிரத்யேகமாக பிரபல சமையல் வல்லுனர் சுரேஷ் பிள்ளை சமைத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் சுரேஷ் பிள்ளை கமல், ஆண்ட்ரியா, லிஸி, காளிதாஸ், தேவி ஸ்ரீ பிரசாத்க்கு சமைத்தது வைரலானது. கேரள கறி மீன், நெய் மீன் வகையை தேங்காய் பாலுடன் வறுத்து எடுத்து கூட்டு பண்புடனோ அல்லது வறண்ட வறுவலாகவோ சமைத்து உண்ணும் இந்த உணவிற்கு நிர்வானா என்று பெயர்.