"இந்த 22 வருசத்துல".. செல்ல மகள் பிறந்தநாளில் நடிகை குஷ்பு பகிர்ந்த நெகிழ்ச்சி பதிவு!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் தொண்ணூறுகளில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை குஷ்பு.

Advertising
>
Advertising

Also Read | VIDEO: இந்தியன்-2 படத்தின் படப்பிடிப்பு இந்த ஊர்லயா நடக்குது? வெளியான சூப்பர் அப்டேட்!

ரஜினி, கமல், விஜய், பிரபு, சரத்குமார், கார்த்திக் உள்ளிட்ட ஏராளமான நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள குஷ்பு, தற்போதும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு தீபாவளி விருந்தாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 'அண்ணாத்த' திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, சதிஷ், சூரி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்த இந்த திரைப்படத்தில், நடிகை குஷ்புவும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார்.

இதற்கு அடுத்தபடியாக, நடிகர் விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படத்தில் குஷ்பு நடித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. முன்னதாக, இயக்குனர் சுந்தர். சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை குஷ்பு. இந்த தம்பதியருக்கு இரண்டு மகள்களும் உள்ளனர்.

இந்நிலையில், தனது மகள் அவந்திகாவின் பிறந்தநாளை முன்னிட்டு, குஷ்பு பகிர்ந்துள்ள புகைப்படங்கள் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. மகள் அவந்திகா பிறந்த நேரத்தில் எடுத்த புகைப்படம், சிறு வயது புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும், தனது கேப்ஷனில், "22 ஆண்டுகளுக்கு முன்பு எங்களின் வாழ்க்கையில் நீ வந்தாய். எங்கள் வாழ்க்கையும் இதனால் அழகாக மாறியது. 22 வருடங்களுக்கு பிறகும் நீ அதனை தொடர்ந்து செய்து வருகிறாய். நீ அழுவதை முதல் முதலாக நான் கேட்டது முதல் இன்று வரை, நீ எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வந்துள்ளாய். நீ எனது வாழ்வையும் அழகாக ஆக்கி விட்டாய். உன்னை நேசிக்கிறேன் Beabu. நீ தொலைவில் இருப்பதால் உன்னை நாங்கள் அதிகம் மிஸ் செய்கிறோம்" என நெகிழ்ந்து போய் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து, பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் அவந்திகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். குஷ்பு - சுந்தர் சி தம்பதியரின் மகளான அவந்திகா, வெளிநாட்டில் தங்கி படித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read | "ஸ்பெஷல் மீட்டிங்".. செல்வராகவன் குடும்பத்தினருக்கு Surprise கொடுத்த முதல்வர் ஸ்டாலின்!!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Actress kushboo shares photos of her daughter on her birthday

People looking for online information on Kushboo, Kushboo shares photos of her daughter, Kushboo Sundar will find this news story useful.