சென்னை: குஷ்புவின் சிவந்த முகத்துடன் கூடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

தமிழில் 85-90களில் பிரபல நடிகை குஷ்பு . தமிழ் மட்டுமல்லாது இந்தி மற்றும் தென்னிந்திய மொழி படங்களில் நடித்தவர். குஷ்பு நடித்த வருஷம் 16, சின்னத்தம்பி, சிங்காரவேலன், பிரம்மா, நடிகன், ரிக்ஷா மாமா, அண்ணாமலை உள்ளிட்ட திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ், கார்த்தி என பல முன்னணி நடிகர்களுடன் குஷ்பு நடித்துள்ளார்.
இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கோண்டவர். பின் குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது அவனி நிறுவனம் மூலம் திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார்.
தமிழ் ரசிகர்களிடையே நல்ல பிரபலமான இவர் அரசியலிலும் குத்தித்தார். திமுக, காங்கிரஸில் இருந்த இவர் தற்போது பாஜகவில் உள்ளார். இவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பொறுப்பு வகித்தவர்.
கடைசியாக இயக்குனர் சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் அண்ணாத்தே படத்தில் மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சதீஷ் ஆகியோருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் குஷ்பு நடித்தார்.
இந்நிலையில் கண்ண்டத்தில் காயத்துடன் குஷ்புவின் போட்டோ வைரலாகி வருகிறது. குடும்ப வன்முறைக்கு எதிராக டிவிட்டரில் இந்த புகைப்படம் ஹேஸ்டேக் உடன் பகிரப்ப்டுகிறது. கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மீரா மெகா சீரியலில் கதை எழுதி குஷ்பு பிரதான மீரா கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் மீரா சீரியலின் படப்பிடிப்பு நிகழ்வு பிப்ரவரி 14 அன்று தொடங்கியது. மீரா சீரியலுக்கு முன்பு, கோகுலத்தில் சீதை சீரியலில் இறுதியாக குஷ்பு நடித்திருந்தார். சிவகாமி , நந்தினி, லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலிலும் குஷ்பு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.