2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியா? - செய்தியாளர் கேள்விக்கு நடிகை குஷ்பூ அதிரடி பதில்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை குஷ்பூ 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிரடி பதில் கொடுத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கியவர் குஷ்பூ. இதை தொடர்ந்து இவர் குணசித்திர கதாபாத்திரங்கள், சின்னத்திரை சீரியல்கள், ரியாலிட்டி ஷோ உள்ளிட்டவற்றிலும் ரசிகர்களை கவர்ந்தார். மேலும் இவர் அரசியலிலும் தீவிரமாக ஆர்வம் காட்டி வருகிறார். 

இந்நிலையில் இன்று வேல் யாத்திரைக்காக அவர் கடலூர் சென்றார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், 2021 தேர்தலில் பா.ஜ.க சார்பாக போட்டியிடுவது குறித்து அதிரடி பதில் கொடுத்தார். 

இதுகுறித்து நடிகை குஷ்பூ கூறியதாவது, ''2021 தேர்தலில் போட்டியிடுவது பற்றி கட்சி மேலிடம் முடிவு செய்து சொல்லும். ஒவ்வொரு முறையும் தேர்தல் சமயத்தில் நான் எதிர்கொள்ளும் கேள்வி இது. இம்முறை நான் இதற்கு பதிலளிக்க போவதில்லை. தேர்தல் நேரத்தில் கட்சி மேலிடம் என்ன முடிவு செய்திருக்கிறது என்பதை தெரிவிக்கும்'' என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தேர்தல் பற்றி நடிகை குஷ்பூ பதில் | Actress khushboo open statement on contesting in 2021 elections

People looking for online information on 2021 Election, Khushboo, Khushboo BJP will find this news story useful.