அடடே.. செம மாஸ் சம்பவம் செய்த நடிகை கீர்த்தி சுரேஷ்.‌. வேற லெவல் இது..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.

Advertising
>
Advertising

Also Read | வேற லெவல் Update … பகத் ஃபாசில் கதபாத்திரம்... சீக்ரெட் உடைத்த ‘விக்ரம்’ படக்குழு – வைரல் Poster

பிரபல தென்னிந்திய நடிகை மேனகா & சினிமா தயாரிப்பாளர் & இயக்குனர் தொழிலதிபர் சுரேஷ்குமார் ஆகியோரின் இளைய மகள் தான் கீர்த்தி சுரேஷ்.   தமிழில் இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ்  அறிமுகமானார்.

தெலுங்கில் 'மகாநடி' என்றும் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்று வெளியான படத்திற்காக இந்திய அரசின் உயரிய விருதான தேசிய விருதை பெற்றார்.

கடைசியாக மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம்  படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது மாமன்னன், தசரா, போலோ ஷங்கர் உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார்.

டொவினோ தாமஸின் வாஷி, உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் படங்களின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார்.

சமீபத்தில் கந்தாரி எனும் தெலுங்கு சிங்கிள் பாடலுக்கும் நடனமாடி இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி சுரேஷ் உள்ளார். இவரின் பதிவுகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  13 மில்லியன் ரசிகர்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.  1.3 கோடி இன்ஸ்டாகிராம் கணக்கு உடைய ரசிகர்கள் தற்போது கீர்த்தி சுரேஷை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.

Also Read | "Fun நானி, Cute நஸ்ரியா.." அடடே சுந்தரா படத்தின் டிரைலர் எப்போ?.. Glimpse வீடியோவுடன் வெளியான 'Update'

தொடர்புடைய இணைப்புகள்

Actress Keerthy suresh get 13 million Instgram followers

People looking for online information on Keerthy Suresh, Keerthy suresh Instgram followers will find this news story useful.