ஆஹா.. இது கீர்த்தி சுரேஷ் வெர்ஷன்.. அரபிக்குத்து பாட்டுக்கு வேற மாரி 'குத்து' டான்ஸ்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பீஸ்ட் அரபிக்குத்து பாடலுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் ஆடிய ஜாலி நடனம் வைரலாகி உள்ளது.

Advertising
>
Advertising

தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். கடைசியாக மரக்காயர், அண்ணாத்த படங்களில் நடித்து இருந்தார். கீர்த்தி சுரேஷ் தற்போது சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம் உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார்.

டொவினோ தாமஸின் புதிய படம், மாரி செல்வராஜ்- உதயநிதி ஸ்டாலின் படம் (மாமன்னன்), வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் (போலா ஷங்கர்) படங்களின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார். கந்தாரி எனும் தெலுங்கு சிங்கிள் பாடலுக்கும் நடனமாடி இருந்தார்

சர்காரு வாரி பட்டா படத்தின் முதல் சிங்கிள் ரொமாண்டிக் பாடல் பிப்ரவரி 14 அன்று காதலர் தினத்துக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது. இதுவரை 68 மில்லியன் ஆர்கானிக் வியூஸ்களை பெற்று வருகிறது. யூடியூப் டிரெண்டிங்கில் தொடர்ந்து இசை பிரிவில் முதல் 5 இடங்களை பிடித்து வருகிறது. இந்த ஆண்டின் மெல்லிசைப் பாடலாக இந்த பாடல் இருக்கும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த பாடலுக்கு கீர்த்தி சுரேஷ் ரீல் வீடியோ செய்திருந்தார். 

அதனைத் தொடர்ந்து பீஸ்ட் அரபிக்குத்து பாட்டுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ்  செம ஜாலி நடனம் ஆடி உள்ளார்.  இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே, நெல்சன் மகன் ஆத்விக், திவ்யபாரதி, சஞ்சனா, ஷிவானி நாராயணன், கனிகா உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்துள்ளனர். இந்த வரிசையில் கீர்த்தி சுரேசும் இணைந்துள்ளார்.

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். 125 மில்லியன் வியூசை இந்த பாடல் கடந்துள்ளது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். 'கோலமாவு கோகிலா' நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

ஆஹா.. இது கீர்த்தி சுரேஷ் வெர்ஷன்.. அரபிக்குத்து பாட்டுக்கு வேற மாரி 'குத்து' டான்ஸ்.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Keerthy Suresh Dance for Beast Arabic Kuthu Song

People looking for online information on Keerthy Suresh will find this news story useful.