சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை உறுதி செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். கடைசியாக மரக்காயர், அண்ணாத்த படங்களில் நடித்து இருந்தார். நடிகை கீர்த்தி சுரேஷ் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தனது ட்விட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கீர்த்தி சுரேஷ் அறிக்கை பின்வருமாறு,
அனைவருக்கும் வணக்கம்,
தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுத்துக்கொண்டாலும், லேசான கொரோனா அறிகுறிகளை அனுபவித்து வருவதால், கோவிட்-19க்கு சோதனை செய்து கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இது வைரஸ் பரவும் வேகத்தை நமக்கு நினைவூட்டுகிறது. அனைத்து கோவிட் பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள். நான் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பான கண்காணிப்பில் உள்ளேன். என்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள், தயவுசெய்து பரிசோதித்து கொள்ளவும்.
நீங்கள் இன்னும் தடுப்பூசி போடவில்லை என்றால், கடுமையான அறிகுறிகளைத் தவிர்க்கவும், உங்கள் மற்றும் உங்கள் அன்புக்குரியவர்களின் சிறந்த ஆரோக்கியத்திற்காகவும், தயவுசெய்து உங்கள் தடுப்பூசிகளை விரைவாக எடுத்துக் கொள்ளுங்கள். விரைவில் குணமடைவேன் என்று நம்புகிறேன், விரைவில் மீண்டும் செயல்படத் தொடங்குவேன்! என அறிக்கையில் கூறியுள்ளார். கீர்த்தி சுரேஷ் தற்போது சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம் உள்ளிட்ட படங்களின் ரிலீசுக்கு காத்திருக்கிறார். டொவினோ தாமஸின் புதிய படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார்.