திருவண்ணாமலை கோயிலில் சாமி தரிசனம் செய்த பிரபல நடிகை.. வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை கீர்த்தி பாண்டியன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

Advertising
>
Advertising

பா. ரஞ்சித் இயக்கும் "நட்சத்திரம் நகர்கிறது".. ரிலீஸ் தேதியுடன் வெளியான மாஸ் அப்டேட்! ஆஹா

நடிகை கீர்த்தி பாண்டியன் இவர் தேவன், இணைந்த கைகள், ஊமைவிழிகள் படங்களில் நடித்த முன்னாள் MLA, நடிகர், தயாரிப்பாளர் அருண் பாண்டியனின் மகளாவார். இவர் இரண்டு படங்களில் தான் நடித்து இருந்தாலும், இணையத்தில் போட்டோ சூட் புகைப்படங்களின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்.

தும்பா, அன்பிற்கினியாள் படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி பாண்டியன் கண்ணகி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி பாண்டியனுடன், நடிகை வித்யா பிரதீப், நடிகை அம்மு அபிராமி ஆகியோர் நடிக்கின்றனர். பருத்தி வீரன் ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரகுமான் இசை அமைக்கிறார்.

சில மாதங்களுக்கு முன் கீர்த்தி பாண்டியன் தனது டிவிட்டர் பக்கத்தில் பிகினி உடையுடன் கூடிய இரண்டு புகைப்படத்துடன் ஒரு நெகிழ்ச்சியான அறிக்கையை வெளியிட்டு கவனம் ஈர்த்தார். அந்த அறிக்கையில் "ஒல்லியாக இருப்பதால் பள்ளியில் படிக்கும் பொழுது கிண்டலுக்கு உள்ளாகியதாகவும், பதின்மப் பருவத்திலும் அந்த கேலி கிண்டல் தொடரவே இரவில் தூக்கத்தில் அழுது இருப்பதாக கூறியுள்ளார். மேலும் சற்று உடலைப் பெருக்குவதற்காக அதிகமாக உணவுகளை உட்கொண்டு கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். இதை தனக்காக செய்ததாகவும், மற்றவர்கள் முன்னிறுத்தும் பாதுகாப்பின்மையை திருப்திப்படுத்த அல்ல என்றும் கூறினார்.

"நான் முன்பு என்னை நேசித்ததைப் போலவே இப்போது என்னையும் நேசிக்கிறேன், எந்த வடிவத்திலும், அளவிலும், நிறத்திலும் என்னை நேசிப்பேன்". என கீர்த்திப்பாண்டியன் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவராக கீர்த்தி பாண்டியன் திகழ்கிறார். அவ்வப்போது போட்டோ ஷூட், திருநெல்வேலி பண்ணையில் நடக்கும் நிகழ்வுகள், நண்பர்களுடன் இருக்கும் போட்டோக்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருப்பவர் கீர்த்தி பாண்டியன்.

இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். "நிறைய நல்ல துவக்கங்கள் இந்த புதிய மாதத்தில்.. நிறைவான அன்பும் நன்றியும்" என கூறி புகைப்படத்தை கீர்த்தி பாண்டியன் பகிர்ந்துள்ளார்.

Also Read | பிரபல போட்டோகிராபருடன் இணைந்து வண்ணமயமான போட்டோ ஷூட்..‌ வைரலாகும் திவ்யபாரதியின் LATEST PHOTOS!

தொடர்புடைய செய்திகள்

Actress Keerthi Pandian at Thiruvannamalai Temple

People looking for online information on Keerthi Pandian, Keerthi Pandian at Thiruvannamalai Temple, Thiruvannamalai Temple will find this news story useful.